IPL 2025 Robot Dog: உலக கிரிக்கெட் ஆச்சர்யம்! ஐபிஎல்லில் அறிமுகமான ரோபா நாய்.. புதிய வளர்ச்சியை கொண்டு வந்த பிசிசிஐ..

IPL Broadcast Technology: 2025 ஐபிஎல் தொடரில் புதிய தொழில்நுட்ப அறிமுகமாக, ஒரு ரோபோ நாய் ஒளிபரப்பு குழுவில் இணைந்துள்ளது. இது பல்வேறு கோணங்களில் போட்டியை பதிவு செய்யும். டெல்லி-மும்பை போட்டியின் போது வீரர்களுடன் விளையாடிய இந்த ரோபோ நாயின் செயல்பாடு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் ரசிகர்களிடம் இந்த ரோபோ நாய்க்குப் பெயர் சூட்டும்படி கேட்டுள்ளது.

IPL 2025 Robot Dog: உலக கிரிக்கெட் ஆச்சர்யம்! ஐபிஎல்லில் அறிமுகமான ரோபா நாய்.. புதிய வளர்ச்சியை கொண்டு வந்த பிசிசிஐ..

ஐபிஎல்லில் புதிய ரோபா நாய் அறிமுகம்

Updated On: 

14 Apr 2025 19:16 PM

கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடங்கப்பட்டது முதலே, கிரிக்கெட்டில் மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டிலும் தொழில்நுட்பத்திலும் அதிகபடியான முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதன்படி, இப்போது ஐபிஎல் ஒளிபரப்பு குழுவில் ஒரு புதிய தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்லின் சமூக ஊடகக் கணக்கு மூலம் இப்போது ஒரு ரோபோ நாயும் (Robo Dog) ஒளிபரப்பு குழுவில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்த வீடியோவில், முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரரும், வர்ணனைக்காகப் பிரபலமானவருமான டேனி மோரிசன் (Danny Morrison), இந்த ரோபோ நாய் இப்போது ஐபிஎல் ஒளிபரப்பு அணிக்காக போட்டியைப் பதிவு செய்யும் என்பதை வெளிப்படுத்தினார்.

ரோபா நாய்:

ஐபிஎல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ நாய் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், அந்த ரோபாக்களில் ஒளிபரப்பிற்காக பல கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோ டேனி மோரிசன் சொல்வதை எல்லாம் செய்தது. அதன்படி, பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு அந்த ரோபா நாய் கைகுலுக்கிக் கொண்டது. தொடர்ந்து, 4 கால் கொண்ட ரோபா நாய், 2 கால்களில் நின்று அனைவரையும் ஆர்ச்சயப்படுத்தியது. மேலும், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் டெல்லி கேப்டன் அக்சர் பட்டேலுடன் விளையாடியது.

டெல்லி – மும்பை வீரர்களுடன் விளையாடிய ரோபா நாய்:


ஐபிஎல் 2025ல் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நேற்று அதாவது 2025 ஏப்ரல் 13ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்பு இரு அணிகளும் பயிற்சி செய்து கொண்டிருந்தன. டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் ஆச்சரியப்பட்டு, “இது என்ன?” என்று கேட்டார். மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லியும் ஆச்சரியப்பட்டு, “இது என்ன வகையான நாய்?” என்று கேட்டார். தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யாவின் பேச்சைக் கேட்டு பக்கத்தில் வந்த ரோபோவை, ‘நல்ல பையன்’ என்று அழைத்தார்.

ஐபிஎல்லில் ரோபோ நாய் என்ன செய்கிறது..?

ஐபிஎல் 2025ல் ஏற்கனவே பல்வேறு வகையான தொழில்நுட்பம் நிறைந்த கேமராக்கள் உள்ளன. இப்போது, இந்த ரோபோ நாயும் ஐபிஎல் போட்டிகளின் நேரடி நடவடிக்கையை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்யும். இந்தப் புதிய முயற்சியின் நோக்கம், பார்வையாளர்கள் போட்டியை ஒரு புதிய கோணத்தில் ரசிக்க உதவுவதாகும். இந்த சமூக ஊடகப் பதிவில், இந்த ரோபோ நாய்க்கு சிறந்த பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தது.