Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..? பிட்ச் நிலவரம் இதோ!

Rajasthan Royals vs Lucknow Super Giants: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 19, 2025) ஜெய்ப்பூரில் மோதுகின்றன. ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜெய்ப்பூர் மைதானத்தில் வெப்பமான வானிலை மற்றும் மெதுவான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி பந்துவீசத் தேர்வு செய்யலாம். லக்னோ அணிக்கு எதிராக ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு அதிகம்.

IPL 2025: வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான்..? ராஜ நடை போடுமா லக்னோ..? பிட்ச் நிலவரம் இதோ!
சஞ்சு சாம்சன் - ரிஷப் பண்ட்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2025 11:09 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) வெற்றிக்காக போராடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (Rajasthan Royals) , அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியை எதிர்கொள்கிறது. அதன்படி, இந்த சீசனின் 36வது போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று (2025 ஏப்ரல் 19) இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளது. ஜெய்ப்பூர் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்புவது முக்கியம், இல்லையெனில் பிளேஆஃப்களுக்கான போட்டி அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடும். ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், லக்னோ அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அந்தவகையில், பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம், பிளேயிங் 11 உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் மற்றும் வானிலை எப்படி..?

ஜெய்ப்பூரில் இன்றும் வானிலை மிகவும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக இருக்கும், மழை பெய்ய வாய்ப்பில்லை. இந்த மைதானத்தில் இதுவரை விளையாடிய ஒரே போட்டி பெங்களூருக்கு எதிரானதுதான். அதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் ஆடுகளம் சற்று மெதுவாகத் தெரிந்தது. எனவே பெரிய ஸ்கோர்கள் இங்கு அரிதாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாக இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசலாம்.

ஐபிஎல் வரலாற்றில் இந்த ஸ்டேடியத்தில் இதுவரை 58 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில், முதலில் பேட்டிங் செய்த அணி 20 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த 38 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஹெட் டூ ஹெட்

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல்லில் 5 முறை மட்டுமே மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும், லக்னோ அணி ஒரே ஒரு போட்டியிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்:

ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், திக்வேஷ் ரதி, மயங்க் யாதவ், அவேஷ் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, ஆகாஷ் மத்வால்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...