Shreyas Iyer DRS Controversy: என்ன கேட்காம DRS எப்படி எடுப்பீங்க..? அம்பயரிடம் பொங்கிய ஷ்ரேயாஸ் ஐயர்.. என்ன நடந்தது?
Shreyas Iyer DRS Controversy: ஐபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் 245 ரன்கள் எடுத்த நிலையில், ஹைதராபாத் அபிஷேக் சர்மாவின் 141 ரன்கள் உதவியுடன் இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில், DRS முறையீட்டின் போது ஷ்ரேயாஸ் ஐயர் நடுவர் மீது கோபம் கொண்ட சம்பவமும் நடந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025ல் (IPL 2025) நேற்று அதாவது 2025 ஏப்ரல் 12ம் தேதியான நேற்று பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிகளுக்கு இடையேயான போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. இருப்பினும், ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் 246 ரன்கள் இலக்கை அடைந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை பார்க்காமல் டி.ஆர்.எஸ்க்கு சைகை செய்தபோது அம்பயர் மீது கோபமடைந்தார். அதனை பற்றிய முழு விவரங்கள் இங்கே..
என்ன நடந்தது..?
இந்த சம்பவமானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 5வது ஓவரில் நடந்தது. பவர்பிளேயில் க்ளென் மேக்ஸ்வெல் பந்து வீசிக் கொண்டிருந்தார். 5வது ஓவரின் இரண்டாவது பந்தில், பந்து ஹெட்டின் கால் பக்கவாட்டில் சென்று கீப்பரின் கையுறைகளுக்குள் சென்றது. அதனால், கீப்பர் பிரப்சிம்ரன் சிங்கும், பந்து வீச்சாளர் க்ளென் மேக்ஸ்வெலும் மேல்முறையீடு செய்தனர். நடுவர் உடனடியாகத் திரும்பிப் பார்த்து, மூன்றாவது நடுவருக்கு டி.ஆர்.எஸ் சமிக்ஞை செய்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் அப்போது பயங்கர கோபமடைந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயரிடம் நடுவர் கேட்கவில்லையா?
Shreyas Iyer’s angry reaction over DRS call. pic.twitter.com/huZBhbDn4F
— CricAsh (@ash_cric) April 12, 2025
கேப்டனாகிய என்னை கேட்காமல் நீங்கள் எப்படி நேரடியாக மூன்றாவது அம்பயரிடம் டி.ஆர்.எஸ் சிக்னல் செய்யலாம் என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், டி.ஆர்.எஸ் எடுக்கலாமா வேண்டாமா என்பதை கேப்டன்தான் முடிவு செய்வார் என்றும், நடுவர் தனது முடிவுக்குப் பிறகு டி.ஆர்.எஸ் முடிவையும் ஏற்க வேண்டும் என்றும் விதி கூறுகிறது. இதனால், பிட்ச் நோக்கி வந்த ஷ்ரேயாஸ் ஐயர், நடுவரைப் பார்த்து கத்தினார். தொடர்ந்து, என்னிடம் கேளுங்கள் என்று கூறினார். இருப்பினும் பின்னர் அவரேடி.ஆர்.எஸ் எடுக்க முடிவு செய்தார்.
ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது எப்படி..?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 246 என்ற கடின இலக்கை துரத்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஹெட் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுக்க, அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸை விளையாடினார். இதன்மூலம், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. மேலும், அபிஷேக் சர்மா 141 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல்லில் ஒரு இந்திய வீரர் விளையாடிய மிகப்பெரிய தனிநபர் இன்னிங்ஸ் இதுவாகும்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 2வது தோல்வி!
ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றிகளுடன் தொடங்கியது. அதன்பிறகு, விளையாடிய 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி, இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்ட இரண்டாவது தோல்வியாகும். 5ல் 3 வெற்றிகளுக்குப் பிறகு, அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.