Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Playoffs: 4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! சென்னை, ராஜஸ்தான் வெளியேறிவிட்டதா?

IPL Playoff Race: ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டிகளுக்கான பரபரப்பான போட்டி சூடுபிடித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் பிளேஆஃப் வாய்ப்புகள் மங்கலாக உள்ளன. மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் இறுதி தகுதி வாய்ப்பை நிர்ணயிக்கும்.

IPL 2025 Playoffs: 4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! சென்னை, ராஜஸ்தான் வெளியேறிவிட்டதா?
ஐபிஎல் 2025 பிளேஆஃப் போட்டிகளுக்கான பரபரப்பான போட்டி சூடுபிடித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு அதிகம். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளின் பிளேஆஃப் வாய்ப்புகள் மங்கலாக உள்ளன. மீதமுள்ள போட்டிகளின் முடிவுகள் இறுதி தகுதி வாய்ப்பை நிர்ணயிக்கும்.Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Apr 2025 17:17 PM

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக்கான இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League) பரபரப்பாக அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி முன்னேறி வருகிறது. லீக் ஸ்டேஜ் போட்டிகளில் பாதிக்கும் மேற்பட்டவை முடிந்த நிலையில், பிளேஆஃப்களுக்கான (IPL 2025 Playoff) சுற்றுக்குள் சூடுபிடித்துள்ளது. அதன்படி, ஐபிஎல் 2025 மே 20ம் தேதி தொடங்க உள்ளது. சில அணிகள் பின்தங்கியுள்ள நிலையில், சில அணிகள் தங்கள் இடங்களை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. பிளேஆஃப்களுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் 4  அணிகளை பற்றி இங்கே பார்க்கலாம். பிளேஆஃப் சுற்றுக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB):

ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தற்போது 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று அதாவது 2025 ஏப்ரல் 28ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை டெல்லியில் உள்ள அவர்களது சொந்த மைதானத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 10 போட்டிகளில் 7 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இந்த அணியின் வலுவான செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது இப்போது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

குஜராத் டைட்டன்ஸ் (GT):

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, ஐபிஎல் 2025ல் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இன்னும் இந்த சீசனில் 6 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பிளேஆஃப் இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்ய இன்னும் 2 வெற்றிகள் மட்டுமே தேவையாக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் (MI):

ஐபிஎல் 2025 தொடக்கத்தில் தொடர் தோல்விகளுக்கு பிறகு,  மும்பை இந்தியன்ஸ் வலுவாக மீண்டும் வந்து அசத்தி வருகிறது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளுடன், இதுவரை 6 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், மும்பை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் போதும், ஹர்திக் பாண்ட்யா படை பிளேஆஃப்களில் களமிறங்க போதுமானதாக இருக்கும்.

டெல்லி கேபிடல்ஸ் (DC):

அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் 2025ல் இதுவரை 9 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மும்பை, குஜராத் மற்றும் டெல்லி அணிகள் தலா 12 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நிகர ரன் ரேட் அடிப்படையில் வலுவான அணியாக உள்ளது. இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய ஃபார்மைக் கருத்தில் கொண்டு அதன் பிளேஆஃப் வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. இந்த பட்டியலில் ஏதாவது ஒரு அணியை பின்னும் தள்ளி பஞ்சாப் கிங்ஸ் அணியும் பிளே ஆஃப்க்குள் வரலாம். அதற்கு அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியை பெறுவது முக்கியம்.

எந்தெந்த அணிகள் வெளியேற இருக்கிறது..?

ஐபிஎல் 2025 எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான பிளேஆஃப் பயணம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். சென்னை அணி தற்போது 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.

ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்...
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!...
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?...
ATM-ல் பணம் எடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு - முக்கிய மாற்றம்
ATM-ல் பணம் எடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு - முக்கிய மாற்றம்...
இனி ஸ்மார்ட் வாட்ச், கார்களிலும் ஜெமினி ஏஐ - கூகுள் சிஇஓ சுந்தர்
இனி ஸ்மார்ட் வாட்ச், கார்களிலும் ஜெமினி ஏஐ - கூகுள் சிஇஓ சுந்தர்...
வெள்ளி கறுக்குதா? வீட்டிலேயே எளிதாக பளபளப்பாக்கலாம்!
வெள்ளி கறுக்குதா? வீட்டிலேயே எளிதாக பளபளப்பாக்கலாம்!...
குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்ற அஜித் குமார்
குடியரசுத் தலைவர் கையால் பத்ம பூஷன் விருதைப் பெற்ற அஜித் குமார்...