Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!

Chennai Super Kings: ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இந்தப் போட்டி வாழ்வா மரணப் போட்டி. பிளே ஆஃப் தகுதி பெற சென்னை அணிக்கு மீதமுள்ள போட்டிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி அவசியம். வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருக்கும்.

IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
எம்.எஸ்.தோனி - ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 20 Apr 2025 17:41 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி முக்கியமான நாள் என்றே சொல்லலாம். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings) நேருக்குநேர் மோதுகின்றன. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எம்.எஸ்.தோனியும் தலைமை தாங்குகின்றனர். இந்த போட்டியில் மும்பை அணியின் கோட்டையான வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இந்த போட்டி ஏன் முக்கியமானது என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

செய் அல்லது செத்துமடி:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனை பொறுத்தவரை இரு அணிகளுக்கு இது சிறந்த சீசனாக அமையவில்லை. ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் சற்று சிறப்பாக உள்ளது.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது இடம்) உள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் களமிறங்குவதன் மூலம் ஐபிஎல் 2025 இல் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மோதல் இதுவாகும். 2025 மார்ச் 23ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி சென்னை அணிக்கு சற்று நம்பிக்கை அதிகரிக்கும்.

இருப்பினும், புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை, இந்த போட்டி சென்னை அணிக்கு மிகவும் முக்கியமானது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி மற்றொரு தோல்வியை சந்தித்தால், ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறக்கூடும்.

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது எப்படி..?

ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகள் தேவை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் மீதமுள்ள 7 போட்டிகளில் 6ல் கண்டிப்பாக வெற்றி பெறுவது முக்கியமானது. தற்போதைய சூழலை கருத்தில்கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது மிகப்பெரிய சவால் ஆகும். சென்னை அணி இனி ஒரு தவறு செய்தாலும், பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற்றும். இன்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மோதல் உட்பர ஒவ்வொரு ஆட்டமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாக் அவுட் சுற்றுதான்.

வான்கடே பிட்ச் எப்படி..?

ஐபிஎல் 2025 வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 166 ரன்கள் ஆகும். இந்த ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங்கை கொடுக்கும். பேட்ஸ்மேன்கள் சிறிது நின்று தாக்குபிடித்து விளையாடினால் அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்குவார்கள்.

களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...