IPL 2025: உள்ளே வந்த ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஷாக்! சட்டென அம்பயர் செய்த செயல்.. மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி!
Hardik Pandya's Bat Inspection: ஐபிஎல் 2025ன் 29வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பேட் நடுவர்களால் சோதனை செய்யப்பட்டது, இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஐபிஎல் விதிகளின்படி, பேட்டின் அளவுகள் சரிபார்க்கப்படுகின்றன. மேலும், ஹர்திக் பாண்டியாவின் பேட் விதிகளுக்கு உட்பட்டே இருந்தது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 29வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே நேற்று அதாவது 2025 ஏப்ரல் 14ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2025ல் தனது 2வது இடத்தை பிடித்தது. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டை நடுவர்கள் சரிபார்த்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டிக்காக நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு ஏற்ப தனது பேட் இருப்பதை உறுதி செய்ய விரும்பினார்.
எதற்காக சோதனை..?
சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது, ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டை சரிபார்க்க நடுவர் ஒரு சாதனத்தை பயன்படுத்துவதை காண முடிந்தது. 2025 ஏப்ரல் 13ம் தேதியான நேற்று நடைபெற 2 போட்டிகளில் நடுவர் பேட்ஸ்மேனின் பேட்டை சரிபார்த்த 3வது நிகழ்வு இதுவாகும். முன்னதாக ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஷிம்ரன் ஹெட்மியர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோரின் பேட்களையும் நடுவர்கள் பரிசோதிக்கப்பட்டன. விதிகளின்படி, ஐபிஎல்லில் எந்த பேட்ஸ்மேனின் பேட்டையும் சரிபார்க்க நடுவர்களுக்கு அனுமதி உண்டு.
ஐபிஎல்லின் பேட் அளவை நிர்ணயிக்கும் விதி என்ன..?
Umpire checked Hardik Pandya bat before he came to bat today😭😭
Unreal Aura🔥🔥 https://t.co/tV1Pm0yNGm— ` (@Sneha4kohli) April 13, 2025
ஐபிஎல் விதிகளின்படி, பேட்டின் கைப்பிடி உட்பட பேட்டின் மொத்த நீளம் 38 அங்குலங்களுக்கு (96.52 செ.மீ) மிகாமல் இருக்க வேண்டும். அதேபோல், பேட்டின் அகலம் அகலம் 4.25 அங்குலங்களுக்கு (10.8 செ.மீ) மிகாமல் இருக்க வேண்டும். மேலும், பேட்டின் எட்ஜானது 1.56 அங்குலங்களுக்கு (4.0 செ.மீ) மிகாமலும், பேட்டின் கைப்பிடி நீளம் உட்பட 52% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
போட்டி நிர்ணயித்த வழிகாட்டுதல்களின்படி, ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டின் அகலமும் நீளமும் சரியாக இருந்தன. இல்லையென்றால், ஹர்திக் பாண்ட்யா ஒரு புதிய சிக்கலில் சிக்கியிருப்பார்.
சோதனை செய்வதற்கான காரணம் என்ன..?
ஐபிஎல் 2024 சீசனில் ஒவ்வொரு போட்டியின்போது ஒரு சில அணிகள் குறைந்தது 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். இதனால், ஐபிஎல் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களில் ஆதிக்கம் நிறைந்ததாக மாறியது. இதை கட்டுப்படுத்தும் வகையில், நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் அம்பயர்கள் எந்தவொரு பேட்ஸ்மேன்களில் பேட்டையும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்கிறதா என்பதை சோதிக்கலாம். அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டை அம்பயர்கள் சோதனை செய்தனர்.