Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்கள்.. புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா..!
Mumbai Indians: ஐபிஎல் 2025 இன் 41வது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா அற்புதமான அரைசதம் அடித்து 7 விக்கெட் வெற்றிக்கு வழி வகுத்தார். இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது அரைசதம். மேலும், டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் எடுத்த 5வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். விராட் கோலியை விட குறைவான பந்துகளில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இன் 41வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா (Rohit Sharma) அற்புதமாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்தப் போட்டியில் மும்பை அணி ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஐபிஎல் 2025ல் அவரது தொடர்ச்சியான 2வது அரைசதமாகும். முன்னதாக கடந்த 2025 ஏப்ரல் 20ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர் ரோஹித் சர்மா பல சாதனைகளை படைத்தார். விராட் கோலிக்குப் பிறகு 12000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரோஹித் பெற்றுள்ளார். இந்த நிலையில், ரோஹித் சர்மா படைத்த சாதனைகள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
12 ஆயிரம் ரன்கள்:
HITMAN WON TO BACK TO BACK AWARD IN MI DRESSING ROOM,🔥🔥
GOAT for a reason #RohitSharma𓃵#MumbaiIndianspic.twitter.com/PUKA6W6bT2
— Sachin sharma (Sports and political journalist) (@72Sachin_sharma) April 24, 2025
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் எடுத்து புதிய பட்டியலில் இணைந்தார். ரோஹித் சர்மா தனது 456 போட்டியில் 443வது இன்னிங்ஸில் டி20 போட்டியில் இந்த சாதனை படைத்து, கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்களை படைத்த 5வது வீரரானார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
- கிறிஸ் கெய்ல் – 14562 ரன்கள் (463 போட்டிகள்)
- அலெக்ஸ் ஹேல்ஸ் – 13610 ரன்கள் (494 போட்டிகள்)
- சோயிப் மாலிக் – 13571 ரன்கள் (557 போட்டிகள்)
- கீரோன் போலார்டு – 13537 ரன்கள் (695 போட்டிகள்)
- விராட் கோலி – 13208 ரன்கள் (407 போட்டிகள்)
- டேவிட் வார்னர் – 13019 ரன்கள் (404 போட்டிகள்)
- ஜோஸ் பட்லர் – 12469 ரன்கள் (442 போட்டிகள்)
- ரோஹித் சர்மா – 12013* ரன்கள் (456 போட்டிகள்)
விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோஹித் சர்மா:
ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 12000 ரன்களை எட்டியது மட்டுமின்றி, விராட் கோலியை விட குறைவான பந்துகளை விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி 8997 பந்துகளை விளையாடி 12000 ரன்களை எட்டினார். ஆனால், ரோஹித் சர்மா வெறும் 8885 பந்துகளை விளையாடி இந்த சாதனையை படைத்தார். மிகக் குறைந்த பந்துகளில் 12000 ரன்களைக் கடந்த சாதனை முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர் கீரன் பொல்லார்டின் பெயரில் உள்ளது. கீரன் பொல்லார்ட் வெறும் 7992 பந்துகளை மட்டுமே விளையாடி 12000 ரன்களை நிறைவு செய்தார். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ஸ் 8100 பந்துகள் விளையாடி 12000 ரன்கள் எடுத்தார். ஹேல்ஸ் 8191 பந்துகளுடனும், ஜோஸ் பட்லர் 8261 பந்துகளுடனும் 12000 ரன்களை எட்டினார். அதேநேரத்தில், டேவிட் வார்னர் 8563 பந்துகளில் 12000 ரன்கள் எடுத்தார். இந்த பட்டியலில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 9424 பந்துகளில் 12000 ரன்களை நிறைவு செய்தார்.