MI vs RCB: கடைசி வரை திக்! திக்! வெற்றி அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை.. கொடி நாட்டிய பெங்களூரு!

IPL 2025 MI vs RCB Match Highlights: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக உள்ளே வந்த திலக் வர்மா - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பயம் காட்ட தொடங்கியது. பாண்ட்யா 8 பந்துகளில் 33 ரன்கள் என்று ரன் மழை பொழிய, திலக் வர்மாவும் சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டு கொண்டிருந்தார்.

MI vs RCB: கடைசி வரை திக்! திக்! வெற்றி அருகில் வந்து கோட்டை விட்ட மும்பை.. கொடி நாட்டிய பெங்களூரு!

ஹர்திக் பாண்ட்யா - விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமார்

Published: 

07 Apr 2025 23:33 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 20வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 7ம் தேதி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்களும், கேப்டன் ரஜத் படிதார் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா 40 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

223 ரன்கள் இலக்கு:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் விக்கெட் ரோஹித் சர்மா மூலம் விழுந்தது. அதிரடியாக பேட்டிங் தொடங்கிய ரோஹித் சர்மா 9 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருரன் 17 ரன்களுடன் யாஷ் தயாள் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். மறுமனையில் சிறப்பாக ஆடி கொண்டிருந்த ரியான் ரிக்கெல்டனும் 10 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோஷ் ஹேசில்வுட் அவருக்கு பெவிலியன் செல்லும் வழியைக் காட்டினார். இதனால், மும்பை அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது.

சூர்யகுமார் யாதவுடன் வில் ஜாக்ஸ் இணைந்து மும்பை அணியின் வெற்றிக்காக போராட, மும்பை அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி வெற்றி பெற 84 பந்துகளில் 168 ரன்கள் தேவையாக இருந்தது. க்ருனால் பாண்ட்யா பந்தில் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த வில் ஜாக் அவுட் ஆக, சிறிது நேரத்தில் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவும் யாஷ் தயாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக உள்ளே வந்த திலக் வர்மா – கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூட்டணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பயம் காட்ட தொடங்கியது. பாண்ட்யா 8 பந்துகளில் 33 ரன்கள் என்று ரன் மழை பொழிய, திலக் வர்மாவும் சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்கவிட்டு கொண்டிருந்தார். புவனேஷ்வர் குமார் வீசிய 18வது ஓவரில் திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களில் ஆட்டமிழக்க, ஹசல்வுட் வீசிய அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்களில் அவுட்டானார். இதன் காரணமாக கடைசி 6 பந்துகளில் மும்பை அணிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், க்ருனால் பாண்ட்யா வீசிய முதல் பந்தே சாண்டனர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்த பந்தே உள்ளே வந்து சிக்ஸ் தூக்க முயற்சித்த தீபக் சாஹர், டிம் டேவிட் மற்றும் பில் சால்ட் கூட்டணி அசாத்திய கேட்சால் ஆட்டமிழந்தார். அடுத்த 2 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் நமன் அவுட்டாக, கடைசி பந்தை பும்ரா டாட் செய்தார். இதன் காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories
KKR vs GT: சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்..!
CSK Playoff Scenario: 8 போட்டியில் 6 தோல்விகள்! சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இன்னும் வாய்ப்புள்ளதா?
MS Dhoni: இந்த ஆண்டு பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம்.. சென்னை அணி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து!
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!