IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

KKR vs GT Match Preview: ஐபிஎல் 2025ன் 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, பேட்ஸ்மேன்களுக்கும் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமானதாக இருக்கும். குஜராத் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. போட்டிக்கான வானிலை சாதகமாக இருக்கும். இரு அணிகளின் சாத்தியமான விளையாட்டு வீரர்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

Published: 

21 Apr 2025 10:48 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 39வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 21ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு (Gujarat Titans) இடையே மோதல் நடைபெறும். இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 போட்டிகள் விளையாடி 5 வெற்றிகளுடன் தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அந்தவகையில், கொல்கத்தா அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்துமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். போட்டி நடைபெறும் ஈடன் கார்டன்ஸ் பிட்ச் எப்படி.? பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட்:

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என இருவருக்கும் சமமான பங்களிப்பை தரும். முந்தைய போட்டிகளில் முடிவுகளை கருத்தில்கொண்டு, இரு அணிகளின் அதிகபட்ச ஸ்கோர் 160 முதல் 180 ரன்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து மற்றும் மிதமான வேகத்தில் பந்து வீசும் வீரரக்ளுக்கு பிட்ச்சில் இருந்து சில உதவிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இரவு நேரம் என்பதால் பனியை கருத்தில்கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 3 போட்டிகள் நடந்துள்ளன. இதில் குஜராத் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

வானிலை எப்படி..?

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தின் வானிலை பற்றி பேசுகையில், இரவு நேரம் என்பதால் அதிக வெப்பம் இருக்காது. மழை பெய்யும் வாய்ப்பும் ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த போட்டியில் மழை பற்றி கவலை என்பதை ரசிகர்கள் கொள்ள வேண்டாம். அதிக வெப்பம் இல்லாததால் வீரர்கள் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

சுனில் நரைன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ரிக் நோர்கியா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

Related Stories
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!