Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: வான்கடேவுக்கு வந்த சென்னை..! சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா மும்பை..? வானிலை நிலவரம்!

Mumbai Indians vs Chennai Super Kings: ஐபிஎல் 2025 இன் 38வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வான்கடே ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச், இரு அணிகளின் பலம், வானிலை என அனைத்தையும் இந்தப் பதிவில் காணலாம். இந்தப் போட்டி மும்பையில் ஏப்ரல் 20, 2025 அன்று நடைபெறுகிறது. மும்பை அணி 7வது இடத்திலும், சென்னை அணி கடைசி இடத்திலும் உள்ளது.

IPL 2025: வான்கடேவுக்கு வந்த சென்னை..! சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா மும்பை..? வானிலை நிலவரம்!
எம்.எஸ்.தோனி - ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Apr 2025 10:50 AM

2025 ஐபிஎல்லின் (IPL 2025) 38வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 20ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும் (Mumbai Indians), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings) நேருக்குநேர் மோதுகின்றன. இந்த போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது. இந்தநிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் நிலவரம், பிளேயிங் 11 உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

வான்கடே பிட்ச் எப்படி..?

மும்பை வான்கடே ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. சிவப்பு மண்ணால் செய்யப்பட்ட பிட்ச் மற்றும் எல்லை குறுகிய பவுண்டரிகள் இன்றைய போட்டியில் அதிக ஸ்கோரிங் போட்டியாக மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2வது இன்னிங்ஸின்போது மனி பெய்ய வாய்ப்பு உள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 119 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 55 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த அணி 64 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 38 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும், சென்னை அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

வானிலை எப்படி..?

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மும்பையில் வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் இது ஒரு வழக்கமான கோடை நாளாக இருக்கும் என்பதால், போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை. அதன்படி, வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் தீர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், கரண் சர்மா, தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷேக் ரஷித், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, மதீஷ் பத்திரனா, அன்ஷுல் கம்போஜ், தீபக் ஹூடா

திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்
2026 சட்டமன்ற தேர்தலில் யார் யாருக்கு எவ்வளவு தொகுதிகள் - நயினார்...
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...