Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்..? குஜராத் அணியை எதிர்கொள்ளும் டெல்லி..!

Gujarat Titans vs Delhi Capitals: ஐபிஎல் 2025ன் 35வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. இரு அணிகளின் ஹெட்-டு-ஹெட் பதிவுகள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்கள் இந்த போட்டி முன்னோட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. வெற்றி பெறும் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும்.

IPL 2025: முதல் இடத்திற்கு போட்டி! வெற்றி யார் வசம்..? குஜராத் அணியை எதிர்கொள்ளும் டெல்லி..!
குஜராத் டைட்டன்ஸ் Vs டெல்லி கேபிடல்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Apr 2025 10:45 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 35வது போட்டியில் இன்று அதாவது ஏப்ரல் 19ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும் (Delhi Capitals), குஜராத் டைட்டன்ஸ் அணியும் (Gujarat Titans) மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சி செய்யும். அந்தவகையில், குஜராத் – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதில், வெற்றி பெறும் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்து கொள்ளும், இப்படியான சூழ்நிலையில், நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் எப்படி..?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் பொறுத்தவரை இதுவரை 39 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றி, 18 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 20 போட்டிகளில் 2வதாக பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இங்கு 3 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இந்த 3 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு பனி ஒரு காரணமாக இருந்தாலும், முதல் இன்னிங்ஸில் ஒரு பெரிய ஸ்கோர் அடிப்பது வெற்றி பெற உதவி செய்யும். இந்த போட்டி மதியம் 3.30 மனிக்கு தொடங்கும் என்பதால் இங்கு பனி இருக்காது.

பிட்சை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் நல்ல பவுன்ஸ் வரும். இதனால் பந்து எளிதாக பேட்டிங்கில் படும். அதேநேரத்தில், 2வது இன்னிங்ஸின்போது பந்து வீச்சாளர்களுக்கும் இங்கு உதவி கிடைக்கும். ஐபிஎல்லில் இந்த மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் 281 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர்கள் 143 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளிலும், குஜராத் டைட்டன்ஸ் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வானிலை எப்படி..?

மதியம் நேரத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பனியின் தாக்கம் இருக்காது. அதேநேரத்தில் மழை உள்ளிட்ட வானிலையிலும் எந்த பிரச்சினையும் இருக்காது. இருப்பினும், கோடை காலம் என்பதால் வெப்பத்தில் விளையாடுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். அதன்படி, வெப்ப நிலையும் 40 டிகிரிக்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரன் அடிக்க பேட்ஸ்மேன்கள் சற்று சிரமத்தை எதிர்கொள்ளலாம்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

குஜராத் டைட்டன்ஸ்:

சாய் சுதர்ஷன், சுப்மன் கில், குமார் குஷாக்ரா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

டெல்லி கேபிடல்ஸ்:

ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், கருண் நாயர், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...