IPL 2025: சொந்த மைதானத்தில் காத்திருக்கும் பெங்களூரு.. தடை போடுமா பஞ்சாப்..? மழைக்கு வாய்ப்பாம்..!

RCB vs PBKS Match Preview: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 18, 2025) எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. பெங்களூரு பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. வானிலை வெப்பமாகவும், லேசான மழை சாத்தியமும் உள்ளது. இரு அணிகளின் பலம், நேருக்கு நேர் போட்டிகள், பிளேயிங் லெவன் விவரங்கள் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

IPL 2025: சொந்த மைதானத்தில் காத்திருக்கும் பெங்களூரு.. தடை போடுமா பஞ்சாப்..? மழைக்கு வாய்ப்பாம்..!

ரஜத் படிதார் - ஷ்ரேயாஸ் ஐயர்

Published: 

18 Apr 2025 12:21 PM

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) 2025ன் 34வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 18ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோத உள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 18வது சீசனில் இதுவரை 2 முறை சொந்த ஸ்டேடியத்தில் விளையாடியது. இந்த 2 போட்டியிலும் ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. மறுபுறம், 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ், இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. இந்த நிலையில், சின்னசாமி ஸ்டேடியத்தில் பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரம், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தின் மேற்பரப்பு எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் அதிக ரன்களை குவிப்பார்கள். மறுபுறம், பந்துவீச்சு பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 2வது இன்னிங்ஸில் உதவி கிடைக்கும். இந்த ஸ்டேடியத்தில் 190 – 210 க்கு இடைப்பட்ட ஸ்கோர் ஒரு நல்ல ஸ்கோராக பார்க்கப்படுகிறது. சின்னசாமி ஸ்டேடியத்தின் பவுண்டரி எல்லைகள் சிறியதாக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 97 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 41 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 52 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, 4 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளது. அதேநேரத்தில், டாஸ் வென்ற அணிகள் 52 போட்டிகளிலும், தோல்வியடைந்த 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வானிலை எப்படி..?

2025 ஏப்ரல் 18ம் தேதியான இன்று பெங்களூருவில் வானிலை வெப்பமாக இருக்கும். அதன்படி, இன்றைய நாளில் பெங்களூருவில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலையை கணிக்கும் அக்யூவெதர் தெரிவித்துள்ளது. இருப்பினும், பெங்களூருவில் மாலை நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் 17 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

Related Stories
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!
IPL 2025: வான்கடேவுக்கு வந்த சென்னை..! சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா மும்பை..? வானிலை நிலவரம்!