Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: வெற்றி யாருக்கு..? ஜெய்ப்பூரில் RR vs RCB மோதல்.. வானிலை யாருக்கு சாதகம்..?

RR vs RCB : ஐபிஎல் 2025 இன் 28வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஜெய்ப்பூரில் மோதுகின்றன. சவாய் மான் சிங் ஸ்டேடியத்தின் சமநிலையான பிட்ச், இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பளிக்கும். நேருக்குநேர் மோதலில் பெங்களூரு சற்று முன்னிலையில் உள்ளது. வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கான இரு அணிகளின் சாத்தியமான பதினோரு வீரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

IPL 2025: வெற்றி யாருக்கு..? ஜெய்ப்பூரில் RR vs RCB மோதல்.. வானிலை யாருக்கு சாதகம்..?
ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 13 Apr 2025 10:55 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 28வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 13ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. அதேநேரத்தில், ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதாரும் டாஸ் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு களத்தில் இறங்குவார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனின் முதல் போட்டியை ஜெய்ப்பூரில் உள்ள தங்கள் சொந்த ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. இதற்கு இந்த சீசனில் ராஜஸ்தான் அணி தங்களது மற்றொரு சொந்த ஸ்டேடியமான குவஹாத்தியில் 2 போட்டிகளில் விளையாடியது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய இரண்டு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்விக்கு பிறகு, வெற்றிக்காக களமிறங்குகிறது. இந்தநிலையில், போட்டி நடைபெறும் பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட் எப்படி..?

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தின் ஆடுகளம் கருப்ப்ய்ய் மண்ணால் வடிவமைக்கப்பட்டது. இது மிகவும் சமநிலையான பிட்ச் ஆகும். இங்கு பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சமமான உதவி கிடைக்கும். மேலும், இங்கு பவுண்டரி எல்லையானது. எனவே, பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது கடினமானது. இந்த ஸ்டேடியத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சராசரி பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் சுமார் 135 ரன்கள் ஆகும்.

சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இதுவரை 57 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணி 20 முறையும், சேஸிங் செய்த அணி 37 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு 200க்கு மேற்பட்ட ஸ்கோர்கள் 3 முறை மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஸ்டேடியத்தில் 9 போட்டிகளில் 4ல் வெற்றியும், 5ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் 189 ரன்கள் ஆகும்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு போட்டிகளுக்கு முடிவு இல்லை.

வானிலை அறிக்கை:

ஜெய்ப்பூரில் இன்று வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் வெப்பநிலை 37 டிகிரியை எட்டும். அதன்படி, மழைக்கான முன்னறிவிப்பு எதுவும் இல்லை. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரான் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷ்னா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட்.

சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு...
சரத்குமார் படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்த வடிவேலு......
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்
அமெரிக்கா: பேஸ்புக்கில் மனித எலும்புகள் விற்பனை செய்த பெண்...
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?
அறிகுறியே இல்லாமல் கண் பார்வையை பறிக்கும் நோய் - தடுப்பது எப்படி?...
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......