IPL 2025: சொந்த மண்ணில் கெத்துக்காட்டுமா குஜராத்..? தட்டி பறிக்குமா ராஜஸ்தான்..? பிட்ச் விவரம் இதோ!

Gujarat Titans vs Rajasthan Royals: நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மொத்தம் 37 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், முதலில் பந்துவீசிய அணி 20 முறையும் வென்றுள்ளது. டாஸ் வென்ற அணி 17 முறையும், தோல்வியடைந்த அணி 20 முறையும் வென்றுள்ளது.

IPL 2025: சொந்த மண்ணில் கெத்துக்காட்டுமா குஜராத்..? தட்டி பறிக்குமா ராஜஸ்தான்..? பிட்ச் விவரம் இதோ!

சுப்மன் கில் - சஞ்சு சாம்சன்

Published: 

09 Apr 2025 11:39 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 23வது போட்டியில் இன்று அதாவது ஏப்ரல் 9ம் தேதி சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கும் இடையே மோதுகிறது. இந்த போட்டி நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. அதேநேரத்தில், புள்ளிப் பட்டியலில் குஜராத் 2வது இடத்திலும், ராஜஸ்தான் 7வது இடத்தில் உள்ளது. சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) 4 போட்டிகளில் இதுவரை விளையாடி 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

சுப்மன் கில் கில் தலைமையிலான குஜராத் அணி, சொந்த மண்ணில் அதாவது நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வலுவாக உள்ளது. ஐபிஎல் 2025ல் இதுவரை இந்த மைதானத்தில் 2 போட்டிகள் நடந்துள்ளன, அதில் குஜராத் ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒன்றில் தோல்வியடைந்துள்ளது.

நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..?

நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஆரம்பம் முதலே பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் மூலம் தாக்குதலை தொடுப்பார்கள். அதேநேரத்தில், போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பேட்டிங் பிட்சாக மாறும். இதன் காரணமாக, 200 ரன்கள் எடுப்பது பெரிய விஷயமாக இருக்காது. அதன்படி, இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுக்கலாம். அதேநேரத்தில், இங்கே இலக்கை துரத்தும்போது வெற்றி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதற்கு, முதலில் பேட்டிங் செய்யும் அணி சுமார் 210 ரன்கள் எடுக்க வேண்டும்.

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மொத்தம் 37 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 17 முறையும், முதலில் பந்துவீசிய அணி 20 முறையும் வென்றுள்ளது. டாஸ் வென்ற அணி 17 முறையும், தோல்வியடைந்த அணி 20 முறையும் வென்றுள்ளது. இங்கு அதிகபட்ச ஸ்கோர் 243 ஆகும், இது குஜராத்துக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பதிவு செய்த ஸ்கோர் ஆகும். இங்கு தனிநபரின் அதிகபட்ச ஸ்கோராக 2023 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக சுப்மன் கில் 129 ரன்கள் எடுத்தார்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகிஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், சஞ்சீப் சர்மா.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரசித் கிருஷ்ணா.