IPL 2025: பழைய அணிக்கு எதிராக களமிறங்கும் பண்ட், கே.எல் ராகுல்.. யார் யாரை வீழ்த்துவார்கள்..? டெல்லி – லக்னோ இன்று மோதல்!
LSG vs DC Match 40 Preview: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று ஐபிஎல் 2025ன் 40வது போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஹெட் டூ ஹெட் மோதலின் வரலாறு, ஏகானா ஸ்டேடியத்தின் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச், மற்றும் இரு அணிகளின் பதினோரு வீரர்களின் பட்டியல் ஆகியவை இந்த முன்னோட்டத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், மாலையில் பனி அதிகமாக இருக்கலாம்.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 40வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள பாரத ரத்னா வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 2025 ஐபிஎல் சீசனில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றை நோக்கி அடியெடுத்து வைக்கிறது. மறுபுறம் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும் இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நேருக்குநேர் மோதல், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஹெட் டூ ஹெட்:
We love this wholesomeness 🥰🫂 pic.twitter.com/rZ2Y1qKHoO
— Lucknow Super Giants (@LucknowIPL) April 21, 2025
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை ஐபிஎல் வரலாற்றில் மொத்தம் 6 போட்டிகள் நடந்துள்ளன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. லக்னோ அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி அதிகபட்சமாக 211 ரன்களையும், டெல்லி கேபிடல்ஸ் எதிராக லக்னோ அணி 209 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
ஏகானா ஸ்டேடியத்தில் பிட்ச் எப்படி..? மழை பெய்யுமா..?
ஐபிஎல் 2025 சீசனில் நிறைய ரன்கள் அடிக்கப்பட்டாலும், ஏகானா ஸ்டேடியத்தில் ரன்கள் குறைவாகவே பதிவாகியுள்ளது. இங்கு பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் உதவியாக செயல்படும். இந்த சீசனில் இந்த ஸ்டேடியத்தில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் ஒருமுறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. இங்கு சில நேரங்களில் பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் வாய்ப்புள்ளது. அந்தவகையில், யார் நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்துவார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் தங்கள் மாயாஜாலத்தைக் காட்ட முடியும். வானிலையைப் பொறுத்தவரை, மழை பெய்ய வாய்ப்பில்லை, மாலையில் பனியின் தாக்கத்தைக் காணலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்:
ரிஷப் பண்ட் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், அப்துல் சமத், திக்வேஷ் ரதி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், அவேஷ் கான்.
டெல்லி கேபிடல்ஸ்:
அக்ஸர் படேல் (கேப்டன்), அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோகித் சர்மா, டி நடராஜன்.