நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் – கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி!
KKR vs LSG: Edge-of-Seat Thriller: கடைசி கட்டத்தில் ரிக்கு சிங் அதிரடி காட்டினார். அவர் 15 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என 38 ரன்களை எடுத்தார். இதனால் ஆட்டம் கடைசி கட்டம் வரை பரபரப்பாக சென்றது. இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் ரிக்கு சிங்கின் முயற்சி கைகொடுக்கவில்லை. இதனையடுத்து அந்த அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 8, 2025 அன்று நடைபெற்ற 21வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும் மோதின. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே (Ajinkya Rahane) பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடி துவக்கம் தந்தனர். இதனிடையே 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 26 பந்துகளில் 47 ரன்கள் குவித்த அய்டன் மார்க்ரம், ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அதிரடியாக ஆடினர். மிட்செல் மார்ஷ் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 48 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொருபுறம் நிக்கோலஸ் பூரன் ருத்ர தாண்டவம் ஆடினார் என சொல்லும் அளவுக்கு கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நான்கு புறமும் சிதறடித்தார். அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவர் 7 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 36 பந்தில் 87 ரன்கள் குவித்தார். இதனையடுத்து லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் சார்பாக ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நிக்கோலஸ் பூரன் அதிரடி
ஐபிஎல் தொடரில் நிக்கோலஸ் பூரன் 2000 ரன்களை கடந்து அசத்தினார். இந்த நிலையில் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது லக்னோ அணி. அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 8 பவுண்ட்ரிகள் 2 சிக்சர்கள் என 35 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என 29 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.
லக்னோ திரில் வெற்றி
கடைசி கட்டத்தில் ரிக்கு சிங் அதிரடி காட்டினார். அவர் 15 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் என 38 ரன்களை எடுத்தார். இதனால் ஆட்டம் கடைசி கட்டம் வரை பரபரப்பாக சென்றது. இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் ரிக்கு சிங்கின் முயற்சி கைகொடுக்கவில்லை. இதனையடுத்து அந்த அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 87 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்து அசத்தியிருக்கிறார். இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 288 ரன்களைக் குவித்து லக்னோ அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3ல் வென்று 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொருபுறம் இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.