IPL 2025: சாய் சுதர்சனின் அதிரடி வீண் – குஜராத்தை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி !

GT vs LSG: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சாய் சுதர்சன், சுப்மன் கில் அதிரடியாக ஆடிய போதிலும் மற்ற வீரர்கள் பெரிதாக கைகொடுக்காதது அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

IPL 2025: சாய் சுதர்சனின் அதிரடி வீண் - குஜராத்தை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி !

குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Updated On: 

12 Apr 2025 20:52 PM

இந்த ஐபிஎல்(IPL) சீசன் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை 27 லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் புள்ளி பட்டியலில் முன்னணியில் உள்ளன. மேலும் தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ளன. முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகளே பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், அணிகள் தங்கள் நிலைகளை மேம்படுத்த கடுமையாகப் போராடி வருகின்றன. இந்த நிலையில் ஏப்ரல் 12, 2025 அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் சாய் சுதர்சன் 37 பந்துகளில் 56 ரன்களும், சுப்மன் கில் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து சிறப்பான துவக்கம் தந்தனர். ஆனால் அந்த அணியின் பிற வீரர்கள் சோபிக்க தவறினர். லக்னோ அணியின் சார்பாக ஷர்துல் தாக்கூர், ரவி பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளையும், திக்வேஷ் சிங் மற்றும ஆவேஸ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மார்க்ரம் – நிக்கோலஸ் பூரன் அதிரடி

இதனைத் தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அய்டென் மார்க்ரம், கேப்டன் ரிஷப் பந்த் களமிறங்கினர். நிதானமாக ஆடிய கேப்டன் ரிஷப் பந்த் 21 பந்துகளில் ப்ரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து மார்க்ரமுடன் கைகோர்த்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடினர். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், மார்க்ரம் 31 பந்துகளில் 1 சிக்ஸ், 9 பவுண்டரி என 58 ரன்களிலும் நிக்கோலஸ் பூரன் 7 சிக்சர், 1 பவுண்டரி என 34 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

கடைசி கட்டத்தில் திரில் வெற்றி

இதனையடுத்து குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த, லக்னோ வீரர்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினர். இதனையடுத்து ரன்கள் மெதுவாகவே உயரத் தொடங்கியது. இந்த நிலையில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனி, சாய் கிஷோர் பந்து வீசிய 20வது ஓவரின் 2வது பந்தில் ஒரு பவுண்டரி, 3 பந்தில் ஒரு சிக்சர் அடித்து அந்த அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிபெற்றது.

லக்னோ அணியின் ஆயுஷ் பதோனி 28 ரன்களுடனும், அப்துல் சமத் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ப்ரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Stories
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!