IPL 2025: கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் கொல்கத்தா.. வாய்ப்பை பறிக்குமா பஞ்சாப்..? ஹெட் டூ ஹெட் விவரம்!

KKR vs PBKS Match 44 Preview: ஐபிஎல் 2025ன் 44வது போட்டியில், ஏப்ரல் 26 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். கேகேஆர் vs பஞ்சாப் கிங்ஸ் போட்டிகளில் கேகேஆர் 21 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. மழை இல்லாமல், வெப்பம் 27-36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளின் விவரங்களும் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

IPL 2025: கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் கொல்கத்தா.. வாய்ப்பை பறிக்குமா பஞ்சாப்..? ஹெட் டூ ஹெட் விவரம்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்

Published: 

26 Apr 2025 11:26 AM

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2025ன் (IPL 2025) 44வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 26ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் (Kolkata Knight Riders), பஞ்சாப் கிங்ஸ் அணியும் (Punjab Kings) மோதுகின்றன. இந்த போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 18வது சீசனில் இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் 5வது போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடித்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பிட்ச் எப்படி..?

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க உதவியாக இருக்கும். அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்ஸ் மற்றும் வேகத்தில் உதவிகளை வழங்கும். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் இதுவரை 97 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தக் காலகட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த அணி 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 49 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளது.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அனி 21 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா ஈடன் கார்ட்னஸில் 13 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், பஞ்சாப் அணி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வானிலை எப்படி..?

கொல்கத்தாவில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதிகப்ட்ச வெப்ப நிலையில் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைபட்ச வெப்பநிலையில் 27 டிகிரி செல்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், மணீஷ் பாண்டே, மொயீன் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அங்கீஷ் ரகுவன்ஷி.

பஞ்சாப் கிங்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, விஷ்ணு வினோத் (விக்கெட் கீப்பர்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.