Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GT vs RR: அரைசதம் அடித்து சவால் விட்ட ஹெட்மியர்.. வெற்றியுடன் சாதித்து காட்டிய குஜராத் டைட்டன்ஸ்!

IPL 2025 GT vs RR Match 23 Highlights: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ரன்களில் ஆட்டமிழந்தது.

GT vs RR: அரைசதம் அடித்து சவால் விட்ட ஹெட்மியர்.. வெற்றியுடன் சாதித்து காட்டிய குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2025 23:32 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 23வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று அதாவது 2025 ஏப்ரல் 9ம் தேதி நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிக்கு எதிரான கடைசி 4 ஓவர்களில் 54 ரன்களை குவித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 53 பந்துகளில் 82 ரன்கள், ஜோஸ் பட்லர் 36 ரன்கள், ஷாருக் கான் 36 ரன்கள், ராகுல் தெவாத்தியா 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷ்னா 54 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

218 ரன்கள் இலக்கு:

218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். குஜராத் அணிக்காக முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் பந்தில் பவுண்டரி விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், அர்ஷத் கான் வீசிய அடுத்த ஓவரில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது ஓவரில் 12 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது. சிராஜ் பந்தில் நிதிஷ் ராணா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

தொடர்ந்து, அடுத்த இரண்டு ஓவர்களை சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் கூட்டணி சிறப்பாக விளையாடியது. அர்ஷத் கான் வீசிய நான்காவது ஓவரில் 16 ரன்களும், முகமது சிராஜ் வீசிய ஐந்தாவது ஓவரில் 11 ரன்களும் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. பவர் பிளே ஓவரின் கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுகொடுக்க, 7வது ஓவரில் 8 ரன்களுடன் ஒரு விக்கெட் விழுந்தது. அந்த ஓவரை வீசிய குல்வந்த் கெஜ்ரோலியா 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக்கை வெளியேற்றினார்.

தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8வது ஓவரில் 68 ரன்களில் நான்காவது விக்கெட்டை இழந்தது. 4 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த துருவ் ஜூரெலை ரஷீத் கான் ஆட்டமிழக்கச் செய்ய, சஞ்சு சாம்சனுடன் ஹெட்மியர் இணைந்தார். இருவரும் 9வது ஓவர்களில் இருந்து 13வது ஓவர் வரை விக்கெட் விடாமல் அதிரடியாக ஸ்கோரை எடுத்து சென்றனர். அதேநேரத்தில், ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து உள்ளே வந்த சுபம் துபே மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் 1 மற்றும் 4 முறையே அவுட்டாக, மறுமுனையில் அதிரடிகாட்டிய ஷிம்ரன் ஹெட்மியரும் 32 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். அப்போது, ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 73 ரன்கள் தேவையாக இருந்தது. அதேநேரத்தில், 2 விக்கெட்டுகளை மட்டுமே கையில் வைத்திருந்தது.

அடுத்த 6 பந்துகளுக்குள் ராஜஸ்தான் அணி 7 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டையும் இழந்தது. 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்த துஷார் தேஷ்பாண்டே ஆட்டமிழக்க, ராஜஸ்தான் வெற்றிக்கு கடைசி 3 ஓவர்களில் 66 ரன்கள் தேவையாக இருந்தது. அடுத்த ஓவரை விக்கெட் விழுகாமல் தீக்‌ஷனா மற்றும் சந்தீப் ஜோடி தட்டி தட்டி விளையாடினார். தொடர்ந்து கடைசி ஓவரை வீசிய சாய் கிஷோர் 13 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த தீக்‌ஷனாவை அவுட் செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை
அடுத்த 5 நாட்கள்.. பலத்த காற்றுடன் கொட்டப்போகும் மழை...
MI vs SRH : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி !
MI vs SRH : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி !...
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!...
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!...
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !...
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?...
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!...
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?...
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!...
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !...
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?...