Rohit Sharma: ரோஹித்தை கேப்டனாக்குங்கள்.. கோயில் வந்த நீதா அம்பானியிடம் ரசிகர் கோரிக்கை! வைரலாகும் வீடியோ..!
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான செயல்பாட்டால், ரசிகர்கள் ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஒரு ரசிகர் நீதா அம்பானியிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை வைத்ததும் வைரலாகி உள்ளது. 2024ல் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா கேப்டனான பின், அணியின் வெற்றி விகிதம் குறைந்துள்ளது.

ஐபிஎல் 2024ல் (IPL 2024) ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றத்தை அளித்தது. இதற்கு பிறகு நடப்பு ஐபிஎல் 2025 சீசனிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இல்லை. 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, மும்பை அணியின் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் ரோஹித் சர்மாவை மீண்டும் கேப்டனாக்க மாற்ற வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதேபோல், மும்பை அணியின் உரிமையாளர் நீதா அம்பானியிடமும் ஒரு ரசிகர் இதே கோரிக்கையை வைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாய்பாபா கோயிலில் தரிசனம்:
மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி சமீபத்தில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அங்கு அவர் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் ரசிகரும் அங்கே வந்தார். நீதா அம்பானிக்கு அருகில் அந்த ரசிகர் வந்தவுடன், பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை பின்னுக்கு தள்ளினர். ஆனால், அந்த ரசிகரின் குரலை மட்டும் அவர்களால் தடுக்க முடியவில்லை.
அந்த ரசிகர் அப்போது தூரத்திலிருந்து, “ மேடம், தயவுசெய்து மீண்டும் ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக்குங்கள்.” என்று கத்தினார். இதை நீதா அம்பானி மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் ரசிகர் இரண்டு முறை கூறினார். அதன்பிறகு, ரசிகரின் வார்த்தைகளை நீதா அம்பானி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு, “பாபா கி மர்ஸி” (சர்வ வல்லமையுள்ளவரிடம் விட்டு விடுங்கள்) என்று கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
நீதா அம்பானியிடம் ரசிகர் கோரிக்கை:
Man was directly telling Nita Ambani to appoint Rohit Sharma as Mumbai Indians captain. That’s unbelievable craze.🥶🔥 pic.twitter.com/YBk9oQb2YZ
— 𝐇𝐲𝐝𝐫𝐨𝐠𝐞𝐧 𝕏 (@ImHydro45) April 13, 2025
சிறந்த கேப்டன்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்ல, ஐபிஎல் வரலாற்றிலும் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும் ரோஹித் சர்மா திகழ்ந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இருப்பினும், கடந்த ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு முன்பே ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியை பாண்ட்யாவை மீண்டும் இணைத்த சிறிது நேரத்திலேயே, அவர் புதிய கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இதனால் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.