Mumbai Indians: கடந்த சீசன்களில் போல் நடந்த அதிசயம்.. ஐபிஎல் 2025ல் மும்பை பட்டம் வெல்வது உறுதி! ஏன் தெரியுமா?

Hardik Pandya's MI on Winning Streak: ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தொடக்கத்திற்குப் பிறகு 5 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2010, 2013, 2015, 2020 ஆண்டுகளில் இதேபோன்ற வெற்றிகள்தான் பின்னர் சாம்பியன்ஷிப் வெற்றியில் முடிந்தது. லக்னோவுக்கு எதிரான அசத்தல் வெற்றியுடன், 150 போட்டிகள் வென்ற முதல் அணியாகவும் மும்பை மாறியது. சிறப்பான ரன்ரேட் மற்றும் தற்போதைய நிலை பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் காட்டுகிறது.

Mumbai Indians: கடந்த சீசன்களில் போல் நடந்த அதிசயம்.. ஐபிஎல் 2025ல் மும்பை பட்டம் வெல்வது உறுதி! ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ்

Published: 

28 Apr 2025 14:48 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் தொடக்கத்தில் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தொடக்கத்தை பெற்றது. முதலில் 5 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, அடுத்த 5 போட்டிகளில் விளையாடி 5லிலும் வெற்றி பெற்றது. வலுவாக மீண்டு வந்த மும்பை அணி இப்போது 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை போலவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025லிலும் சில வலுவான காரணங்கள் அமைந்துள்ளன. அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

லக்னோவுக்கு எதிராக அசத்தல் வெற்றி:

ஐபிஎல் 2025ல் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 27ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ரியான் ரிக்கல்டனின் 58 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் 54 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த லக்னோ அணி 161 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஐபிஎல் 2025ல் பட்டம் வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்..?

ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணி பட்டத்தை வெல்லுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த 2010, 2013, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடந்தது போன்ற ஒரு தற்செயலான சில நிகழ்வுகள் நடைபெறுவதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. உண்மையை சொல்லவேண்டுமானால், ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக 2010, 2013, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மும்பை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்றபோதெல்லாம், மும்பை இந்தியன்ஸ் அணி அந்த ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இப்படியான சூழ்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கூறப்பட்டு வருகிறது.

நல்ல ரன்ரேட்:

வழக்கம் போல் ஐபிஎல்லில் மெதுவாகத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ், 10 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அவர்களது ரன் ரேட்டும் +0.889 சிறப்பாக உள்ளது. எனவே, ஐபிஎல் 2025ல் பிளே ஆஃப் சுற்றுக்குள் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சென்றால், மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயமாக ஐபிஎல் வரலாற்றில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் விடாது. லக்னோ அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் தனது 150வது வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் அணிதான்.