Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்..? தாக்குதல் தொடுக்குமா டெல்லி..? வானிலை நிலவரம்!

Delhi Capitals vs Rajasthan Royals: ஐபிஎல் 2025 இன் 32வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமான வானிலை நிலவும். இரு அணிகளின் கடந்தகால சாதனைகள் மற்றும் சாத்தியமான பிளேயிங் லெவன்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

IPL 2025: தோல்வியில் இருந்து மீளுமா ராஜஸ்தான்..? தாக்குதல் தொடுக்குமா டெல்லி..? வானிலை நிலவரம்!
டெல்லி கேபிடல்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 16 Apr 2025 10:56 AM

இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League) இன் 32வது போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியை இன்று அதாவது 2025 ஏப்ரல் 16ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது. இது டெல்லியில் நடைபெறும் 18வது சீசனின் 2வது போட்டியாகும். முன்னதாக, டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2025 ஏப்ரல் 13ம் தேதி விளையாடியது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதுபோன்ற சூழ்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் என்ன, வானிலை எப்படி, ப்ளேயிங் லெவன் என்னவாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக அமையும். வேகமான அவுட்லீல்டும் குறுகிய பவுண்டரிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சூழ்நிலையை அமைத்து தருகின்றன. அதேநேரத்தில், பந்து வீச்சாளர்களுக்கு பனி காரணமாக சில தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்பினால், அவர்கள் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். மேலும், ஆடுகளம் சில நேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக அமையலாம்.

அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 90 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 43 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த அணிகள் 46 போட்டிகள்லும் வெற்றி பெற்றுள்ளன. . இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 167 ரன்கள் ஆகும்.

வானிலை நிலவரம் என்ன..?

டெல்லியில் வானிலை இன்றைய சூழ்நிலையில் வீரர்கள் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அக்யூவெதர் அறிக்கையின்படி, ஏப்ரல் 16 ஆம் தேதி டெல்லியில் மிகவும் வெப்பமான வானிலை இருக்கும். அன்றைய அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரம் போட்டி என்பதால் வெப்பத்திலிருந்து வீரர்கள் ரிலாக்ஸ் ஆகலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே 29 போட்டிகள் நடந்துள்ளன. ராஜஸ்தான் அணி 15 முறையும், டெல்லி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி முன்னிலை வகித்துள்ளது. ராஜஸ்தான் 3 போட்டிகளிலும், டெல்லி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேபிடல்ஸ்:

ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், கே.எல். ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் (கேப்டன்), அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் திக்ஷினா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே

முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு
முந்தானை முடிச்சு படம் குறித்து நடிகை ஊர்வசியின் கலகலப்பான பேச்சு...
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
மருத்துவமனை ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா
கூலி படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய நடிகர் உபேந்திரா...
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் கூட்டணியில் படம்? - எஸ்.ஜே.சூர்யா!...
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!
கூலி படத்தில் ஸ்பெஷல் பாடல்.. கண்டிப்பா ஹிட்டாகும்- பூஜா ஹெக்டே!...
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?
'குட் பேட் அக்லி' சர்ச்சை: இளையராஜாவின் குற்றச்சாட்டு நியாயமானதா?...
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!
தோழியர் வேண்டுதல்.. மணக்கோலத்தில் மீனாட்சி இருக்கும் கோயில்!...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை...
நெல்லை: இருட்டு கடை அல்வா கடை உரிமையாளருக்கு வந்த சோதனை......
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னையில் கனமழை தொடரும்.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்!...
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!
சம்மர் விடுமுறையை டெல்லியை சுற்றியும் கொண்டாடலாம் வாங்க..!...
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!...