KL Rahul’s Kantara Celebration: களத்தில் காந்தாரா ஸ்டைலில் கே.எல்.ராகுல் செய்த சம்பவம்.. இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்..!
RCB vs DC: 2025 ஐபிஎல் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைத் தோற்கடித்தது. தொடக்கத்தில் பெங்களூரு அணி 163 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு, டெல்லி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 93 ரன்களுடன் அசத்தலான ஆட்டத்தைக் காண்பித்து டெல்லிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். காந்தாரா படத்திலிருந்த காட்சியை போல் செய்த கே.எல்.ராகுலின் கொண்டாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.எல்.ராகுல்
2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2025) 24வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 2025 ஏப்ரல் 10ம் தேதியான நேற்று மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் தலா 37 ரன்களை எடுத்திருந்தனர். 164 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 58 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், பெங்களூரு அணி எளிதான வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர். அப்போது, கே.எல்.ராகுல் (KL Rahul) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டுகளை விடாமல் அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர். கே.எல். ராகுல் 53 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்றார்.
கே.எல்.ராகுல் கொண்டாட்டம்:
Damn! @KLrahul was referring to KANTARA 🔥🔥🥵🥵pic.twitter.com/G8PCasK13h
— TarunTejSrivatsa (@Extra_Emotions_) April 11, 2025
பெங்களூரு அணிக்கு எதிரான மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது டெல்லி அணியின் ஸ்கோர் 10 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, அபிஷேக் போரெலும் அவுட்டானார். இதன்பிறகு, டெல்லியின் ஸ்கோர் 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் ஆனது. இருப்பினும், கே.எல்.ராகுல், கேப்டன் அக்சர் படேல் மற்றும் டிரிஸ்டன் ஸ்டம்ஸுடன் இணைந்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
18வது ஓவரின் கடைசி பந்தில் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு சென்றது. ஃபைன் லெக்கில் இந்த அற்புதமான ஷாட்டுக்கு பிறகு, கே.எல்.ராகுல் மைதானத்திலேயே சிறிது முன்னோக்கி நகர்ந்து, தனது பேட்டிங்கால் தரையில் வட்டம் போட்டு, அதற்கு நடுவில் வாளை சொறுக்குவதற்கு போல் பேட்டை சொறுகினார். கே.எல்.ராகுல் செய்த காட்சிகள் அனைத்தும் ரிஷப் ஷெட்டி படமான காந்தாரா படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆகும். இது பரவலான விவாதத்திற்கு வழிவகுத்தது. ஏனென்றால் ராகுல் இதற்குமுன்பு இப்படியான கொண்டாட்டத்தை செய்தது இல்லை.
என்ன சொன்னார் கே.எல்.ராகுல்..?
The way he says ‘This is mine’ 🥹 pic.twitter.com/DKnWv2HcmN
— Delhi Capitals (@DelhiCapitals) April 11, 2025
இறுதியாக தனது சிறப்பான கொண்டாட்டத்திற்கு பிறகு பேசிய கே.எல்.ராகுல், “காந்தாரா எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் ஹீரோ ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் கடைசி காட்சியில் இது என் மக்களுக்கு சொந்தமான நிலம், இது என் நிலம் என்று கூக்குரல் இடுவார். அதேபோல், இது எனக்கு மிகவும் பிடித்த ஸ்டேடியம், காந்தாரா எனக்கு மிகவும் பிடித்த படம். அதனால்தான் காந்தாரா படத்தின் காட்சிகளை இங்கே காட்ட முயற்சித்தேன். சின்னசாமி ஸ்டேடியம் எனக்கு மிகவும் பிடித்தமானது, அதனால் நான் அப்படி கொண்டாடினேன்” என்று கூறினார்.