Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: தோல்வியில் இருந்து மீளுமா நடப்பு சாம்பியன் கொல்கத்தா..? அணை போடுமா டெல்லி..? இரு அணிகளின் விவரம்!

DC vs KKR Match 48 Preview: ஐபிஎல் 2025 இன் 48வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான ஆடுகளமாக இருக்கும். இரு அணிகளின் ஹெட்-டு-ஹெட், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் கணிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் பற்றிய விவரங்களையும் இக்கட்டுரை வழங்குகிறது. டெல்லி 4வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும் உள்ளது.

IPL 2025: தோல்வியில் இருந்து மீளுமா நடப்பு சாம்பியன் கொல்கத்தா..? அணை போடுமா டெல்லி..? இரு அணிகளின் விவரம்!
அஜிங்க்யா ரஹானே - அக்ஸர் படேல்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Apr 2025 08:01 AM

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2025) 48வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 29ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி இதுவரை இத்தகைய சூழ்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான நேருக்கு நேர், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:

அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். அதேநேரத்தில், பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் எந்த உதவியும் கிடைக்காது என்றே சொல்லலாம். அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சில உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை இந்த ஸ்டேடியத்தில் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் 173 ரன்கள் ஆகும். அதன்படி, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம்.

இங்கு இதுவரை 92 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 44 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 45 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஒரு போட்டியில் முடிவு இல்லை.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேபிடல்ஸ்:

அக்சர் படேல் (கேப்டன்), அபிஷேக் போரல், கருண் நாயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரோவ்மன் பவல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!
திராவிட மாடல் 2.0-க்கு எதிராக அதிமுக வெர்ஷன் 2026 தயாராகிறது!...
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்..
இனிமேல் வெயில் இப்படி தான் இருக்கும் - வானிலை ரிப்போர்ட்.....
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?
வீட்டில் குங்குமம் தயாரிப்பது எப்படி? எத்தனை நாட்கள் பயன்படும்..?...
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?
சனி பகவானுக்குப் பிடித்த 3 ராசிக்காரர்கள்.. யாருன்னு தெரியுமா?...
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!
பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி!...
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?
மே 1-ம் தேதி வெளியாகும் 3 படங்களில் எதை முதலில் பார்ப்பீங்க?...
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
’காலனி' என்ற சொல் நீக்கம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!...
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!
வராரு வராரு அழகர் வராரு.. மதுரை கள்ளழகர் கோயில் சிறப்புகள்!...
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்.. மத்திய அரசு அதிரடி...
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!
பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண்!...
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!
சித்ரா பௌர்ணமி.. கள்ளழகர் திருவிழா.. மே மாத முக்கிய நிகழ்வுகள்!...