IPL 2025: சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை! பதறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? பிளேயிங் லெவன் இதோ!

CSK vs PBKS Match Preview: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 2025 ஏப்ரல் 30 அன்று சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இரு அணிகளின் தற்போதைய நிலை, ஹெட்-டு-ஹெட் விவரங்கள், சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் அறிக்கை மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவை இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

IPL 2025: சொந்த மண்ணில் களமிறங்கும் சென்னை! பதறவிடுமா பஞ்சாப் கிங்ஸ்..? பிளேயிங் லெவன் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்

Published: 

30 Apr 2025 08:00 AM

எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings) பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ன் 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நாளை அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இப்படியான சூழ்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிட்ச் விவரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

சென்னை சேப்பாக்கம் என்று அழைக்கப்படும் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். இந்த பிட்ச்சில் பந்து நின்று வரும் என்பதால், பேட்ஸ்மேன்கள் சற்று ரன்கள் எடுக்க திணறுவார்கள். பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுமையாக பேட்டிங் செய்து, கிரீஸில் நின்றால் அதிக ரன்களை குவிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

சென்னை சேப்பாக்கத்தில் 90 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 51 முறையும், 2வதாக பேட்டிங் செய்த அணி 39 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் 266 ரன்கள் அதிகபட்சமாக குவிக்கப்பட்டுள்ளது.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 31 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

வானிலை எப்படி..?

Accuweather.com இன் அறிக்கையின்படி, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது வானிலை தெளிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரையில் 83 சதவீத ஈரப்பதம் இருக்கலாம், இது வீரர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது. கலீல் அஹமத், மதீஷ பத்திரனா

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கோ ஜென்சன், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா உமர்சாய், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங்