IPL 2025: அதிகாரத்தை காட்டுமா பஞ்சாப்..? வெற்றியை நாட்டுமா சென்னை..? பிட்ச் எப்படி..?

CSK vs PBKS Match 22 Preview: மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை 6 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

IPL 2025: அதிகாரத்தை காட்டுமா பஞ்சாப்..? வெற்றியை நாட்டுமா சென்னை..? பிட்ச் எப்படி..?

பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் - சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

Published: 

08 Apr 2025 08:42 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 22வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 8ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings ) அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து, 3 போட்டிகளில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று களமிறங்கும். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி (PBKS) புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டி தொடங்குவதற்கு முன், போட்டி நடைபெறும் முல்லன்பூர் ஆடுகளம் எப்படி..? பிளேயிங் 11 எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

பிட்ச் எப்படி..?

சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆடுகளத்தின் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகம் மற்றும் பவுன்ஸ்களால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுவார்கள். அதேநேரத்தில், போட்டி தொடங்கிய சிறிது நேரத்திற்கு பிறகு, பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது எளிதாகிறது. மைதானத்தில் பனியின் பங்கும் மிக முக்கியமானது, அதனால்தான் டாஸில் வெல்லும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்கிறது.

மகாராஜா யாதவிந்திர சிங் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை 6 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் 78 என்ற அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். அதேநேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அர்ஷ்தீப் சிங் 4/29 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல்லில் 30 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை 16 முறை தோற்கடித்துள்ளது. அதேநேரத்தில், பஞ்சாப் அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய புள்ளி விவரத்தின்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியே வலுவானதாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், ஷஷாங்க் சிங், பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹால் வதேரா, யுஸ்வேந்திர சாஹல், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் குர்ரன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், மதிஷா பத்திரனா, கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி.

Related Stories
KKR vs GT: சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்..!
CSK Playoff Scenario: 8 போட்டியில் 6 தோல்விகள்! சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இன்னும் வாய்ப்புள்ளதா?
MS Dhoni: இந்த ஆண்டு பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம்.. சென்னை அணி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து!
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!