CSK Playoff Scenario: 8 போட்டியில் 6 தோல்விகள்! சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இன்னும் வாய்ப்புள்ளதா?

CSK's IPL 2025 Struggle: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 8 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. பிளே ஆஃப் செல்ல, அடுத்த 6 போட்டிகளிலும் வெற்றி அவசியம். ஆனால், நிகர ரன் ரேட் மிகவும் மோசமாக உள்ளது. சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

CSK Playoff Scenario: 8 போட்டியில் 6 தோல்விகள்! சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இன்னும் வாய்ப்புள்ளதா?

சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

21 Apr 2025 19:04 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனானது கிட்டத்தட்ட பாதியளவு கடந்துவிட்டது. ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் குறைந்தது 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஐபிஎல்லில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் 2025ல் சற்று சொதப்பினாலும், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை மிகவும் மோசம் என்றே சொல்லலாம். இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று, 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது கடினமாக பார்க்கப்படுகிறது. சென்னை அணி தற்போது வரை 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளனர். இருந்தாலும், ஐபிஎல் 2025 லீக் போட்டிகளில் சென்னை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன. சென்னை அணி இப்போது பிளேஆஃப்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், தோனி படையினர் இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்?

பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா சென்னை..?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 4 புள்ளிகளுடன் -1.392  என்ற நிகர ரன் ரேட்டை கொண்டுள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த சிரமமும் இல்லாமல் பிளேஆஃப் சுற்றுக்கு வேண்டுமானால், அடுத்த 6 போட்டிகளிலும் கட்டாய வெற்றியை பெற வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால், அதன் அதிகபட்ச புள்ளிகள் 16 ஆக உயரும். இருப்பினும், சென்னை அணியின் நிகர ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதாலும், புள்ளிகள் பட்டியலில் 5 அணிகள் ஏற்கனவே 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் 6 போட்டிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிராக தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியை 2025 ஏப்ரல் 25ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை அணி இன்னும் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலும், ரன் ரேட்டை அதிகமாக கொண்டு வெற்றி பெற வேண்டும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் சொதப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த போட்டிகளில் சென்னை அணி அதிக ரன் ரேட்டில் வெற்றிபெறுவது மிக மிக முக்கியம்.

Related Stories
KKR vs GT: சம்பவம் செய்த சுப்மன், சுதர்சன்! கொல்கத்தாவை கடைந்தெடுத்த குஜராத்..!
MS Dhoni: இந்த ஆண்டு பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம்.. சென்னை அணி குறித்து எம்.எஸ்.தோனி கருத்து!
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!