IPL 2025 Controversies: 5 வீரர்களுக்கு அபராதம்! வீட்டுக்கு சென்ற முக்கிய வீரர்.. ஐபிஎல் 2025ல் இதுவரை நடந்த சம்பவங்கள்..!

IPL Player Departures: ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தநிலையில், கடந்த 2025 மார்ச் 22ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 7ம் தேதி வரை ஐபிஎல் 2025ல் நடந்த சம்பவங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

IPL 2025 Controversies: 5 வீரர்களுக்கு அபராதம்! வீட்டுக்கு சென்ற முக்கிய வீரர்.. ஐபிஎல் 2025ல் இதுவரை நடந்த சம்பவங்கள்..!

ஐபிஎல் 2025 சம்பவங்கள்

Published: 

08 Apr 2025 11:57 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) தற்போது சூடுபிடிக்கிறது. இதுவரை தற்போது ஐபிஎல் 18வது சீசனில் 20 போட்டிகள் முடிந்துள்ளன. புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3லிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த 2025 மார்ச் 22ம் தேதி முதல் 2025 ஏப்ரல் 7ம் தேதி வரை ஐபிஎல் 2025ல் நடந்த சம்பவங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

2025 மார்ச் 30 : ஹர்திக் பாண்டியா ரூ. 12 லட்சம் அபராதம்

ஐபிஎல் 2025 சீசனில் முதல் பெனால்டி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கொடுக்கப்பட்டது. மெதுவான ஓவர் வீதத்தை பராமரித்ததற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. முன்னதாக, இதே குற்றத்திற்காக ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டார். தடையிலிருந்து திரும்பிய பிறகு ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியில் மீண்டும் இது நடந்தது.

2025 மார்ச் 31: ரியான் பராக் ரூ. 12 லட்சம் அபராதம்

சஞ்சு சாம்சன் இல்லாதபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்காலிக கேப்டனாக இருந்த ரியான் பராக், மெதுவான ஓவர் வீதத்தை பராமரித்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டார். இதன் காரணமாக, ஹர்திக் பாண்ட்யா பிறகு, இரண்டாவது கேப்டனாக ரியான் பராக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

2025 ஏப்ரல் 2 மற்றும் 5: திக்வேஷ் ரதி இரண்டு அபராதங்கள்

2025 ஏப்ரல் 2ம் தேதி லக்னோ ஜெயண்ட்ஸ் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக, அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதத்துடன், 1 தகுதி இழப்பு புள்ளியை பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் இதே பிரச்சனைக்காக சிக்கினார். இரண்டாவது முறையும் நோட்புக் கொண்டாடத்திற்காக போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தில், மற்றொரு தகுதி இழப்பு புள்ளியும் சேர்க்கப்பட்டது. இப்போது, 2 தகுதி இழப்பு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் இதேபோன்று ஏதேனும் ஒரு பிரச்சனையில் சிக்கினால் போட்டி விளையாட தடை விதிக்கப்படும்.

2025 ஏப்ரல் 3: ரபாடா வீட்டுக்கு சென்றார்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பினார். இதை குஜராத் அணி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஆனால், ரபாடா எப்போது திரும்புவார் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை. இது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஏப்ரல் 5: ஸ்லோ ஓவரில் சிக்கிய ரிஷப் பண்ட்

2025 ஏப்ரல் 5ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஸ்லோ ஓவர் ரேட் பிரச்சனையில் சிக்கினார். இதற்காக இவருக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சீசனில் அவரது அணிக்கு முதல் விதி மீறலாகும். மீண்டும் ஒரு முறை இதே பிரச்சனையில் ரிஷப் பண்ட் சிக்கினால், அபராதங்கள் மேலும் அதிகரிக்கலாம்.

2025 ஏப்ரல் 7: இஷாந்த் சர்மா

டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, லெவன் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் இவரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. இதன்மூலம், ஐபிஎல் 2025ல் அபராதம் விதிக்கப்பட்ட 5வது வீரரானார்.

 

Related Stories
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!