IPL 2025: ஹைதராபாத்தை வீழ்த்த காத்திருக்கும் சென்னை.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா தோனி படை..?
Chennai Super Kings vs Sunrisers Hyderabad: ஐபிஎல் 2025ன் 43வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் கடைசி இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 21 போட்டிகள் நடந்துள்ளன, அதில் சென்னை 15 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியின் முன்னோட்டம், விளையாட்டு வீரர்கள் பட்டியல் மற்றும் வெற்றி வாய்ப்புகள் பற்றிய ஆழமான பார்வை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனி Vs பாட் கம்மின்ஸ்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 43வது போட்டியில் இன்று 2025 ஏப்ரல் 25ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு விளையாடுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் விளையாடுகிறது. மறுபுறம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தனது கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இரு அணிகளின் ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல்லில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே 21 போட்டிகள் நடந்துள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 முறையும் வென்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டி நடைபெற்ற ஐபிஎல் சீசனொல், இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதின. ஒரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், மற்றொரு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் முழு விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:
When the magic hour strikes, the Hustle begins! ✨💪🏻 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/5WYhOUk4JQ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2025
ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, டெவோன் கான்வே, மதிஷா பத்திரனா, நூர் அகமது, கலீல் அகமது, எம்.எஸ். தோனி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ரச்சின் ரவீந்திரா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாம் குர்ரன், ஷேக் ரஷித், அன்ஷுல் காம்போஜ், முகேஷ் கம்போஜ், ஜி. ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ண கோஷ், நாதன் எல்லிஸ், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ஷ்ரேயாஸ் கோபால்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
பாட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், இஷான் கிஷன், ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, அதர்வா டைடே, அபினவ் மனோகர், சிமர்ஜித் சிங், ஜீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், அன்ரிக் மென்டிங், அன்ரிக் மென்டிங், அன்ரிக் மென்டி, சச்சின் பேபி