Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: சேப்பாக்கம் பிட்ச் யாருக்கு சாதகம்..? ஹைதராபாத்துடன் இன்று சென்னை மோதல்!

MA Chidambaram Pitch Report: ஐபிஎல் 2025 சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஏமாற்றமளிக்கும் செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஏப்ரல் 25 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டி, இவ்விரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. சேப்பாக்கம் மைதானத்தின் சுழற்பந்து சாதகமான பிட்ச், வானிலை, மற்றும் இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்கள் இந்த கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்த போட்டி இவ்விரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2025: சேப்பாக்கம் பிட்ச் யாருக்கு சாதகம்..? ஹைதராபாத்துடன் இன்று சென்னை மோதல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 25 Apr 2025 10:00 AM

ஐபிஎல்லின் 2025 (IPL 2025) சீசனில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிக்கும், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கும் சிறப்பானதாக அமையவில்லை. இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் முறையே 9வது மற்றும் 10வது இடத்தில் உள்ளன. இந்த 2 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு செல்ல வேண்டும் என்றால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்தநிலையில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் நாளை அதாவது 2025 ஏப்ரல் 25ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மோதுகிறது. இந்தநிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் பிட்ச், வானிலை, பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானம் சேப்பாக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு எப்போதும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க சற்று திணறுவார்கள். இந்த ஐபிஎல் சீசனின் சில போட்டிகளில், கொஞ்சம் பொறுமை காத்து, மைதானத்தில் பொறுமையாக பேட்டிங் செய்தால், பெரிய ஸ்கோர்களையும் எடுக்க முடியும் என்பதை பேட்ஸ்மேன்கள் நிரூபித்துள்ளனர்.

எம்.ஏ. சிதம்பரம் மைதானம் இதுவரை 81 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 48 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 33 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் 2025 சீசனில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

வானிலை எப்படி..?

சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழையின் தாக்கம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திர, ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பதிரானா, ரவிச்சந்திரன் அஸ்வின்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், இஷான் மலிங்கா, அபினவ் மனோகர்.

மோகன்லாலின் எம்புரானை காமெடி என கூறிய பி.சி.ஸ்ரீராம்...!
மோகன்லாலின் எம்புரானை காமெடி என கூறிய பி.சி.ஸ்ரீராம்...!...
சென்னைக்கு அருகே சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் என்னென்ன?
சென்னைக்கு அருகே சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள் என்னென்ன?...
ஹோம் லோன் வாங்கப்போறீங்களா? இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
ஹோம் லோன் வாங்கப்போறீங்களா? இந்த 7 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...
இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவிட கூடாது - திருமாவளவன்!
இரு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறிவிட கூடாது - திருமாவளவன்!...
அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.. திருச்செந்தூர் நாழிக்கிணறு ஸ்பெஷல்!
அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.. திருச்செந்தூர் நாழிக்கிணறு ஸ்பெஷல்!...
மீண்டும் சூர்யாவுடன் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்?
மீண்டும் சூர்யாவுடன் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்?...
ஆன்மீக பயணம்.. பலரும் அறியாத “அத்ரி மலை” சிறப்புகள்!
ஆன்மீக பயணம்.. பலரும் அறியாத “அத்ரி மலை” சிறப்புகள்!...
ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? 7 நிதி ஆலோசனைகள்!
ஓய்வு காலத்துக்கு திட்டமிடுகிறீர்களா? 7 நிதி ஆலோசனைகள்!...
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர்
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் - முதலமைச்சர்...
வீக்கத்தை குறிக்கும் பர்டாக் செடிகள்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்!
வீக்கத்தை குறிக்கும் பர்டாக் செடிகள்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்!...
மிர்ச்சி சிவாவின் சுமோ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்
மிர்ச்சி சிவாவின் சுமோ படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக்...