Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!

MI vs CSK Head-to-Head: ஐபிஎல் 2025 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 38 போட்டிகளில் மும்பை 20, சென்னை 18 வெற்றிகள் பெற்றுள்ளன. வான்கடே ஸ்டேடியத்தில் 12 போட்டிகள் நடந்துள்ளன, அதில் மும்பை 7 வெற்றிகள் பெற்றுள்ளது. கடைசி 10 போட்டிகளில் சென்னை 7 வெற்றிகள் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 20 Apr 2025 14:37 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 38வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகள் 2025 ஏப்ரல் 20ம் தேதியான இன்று மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. கடைசியாக இருவரும் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுமே ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. எனவே, இந்த இரண்டு அணிகளும் மோதும்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவும். இந்த முறை மும்பை அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், சென்னை அணிக்கு எம்.எஸ்.தோனியும் தலைமை தாங்குகின்றனர். இரு அணிகளுக்கும் இடையே நேருக்கு நேர் மோதலில் யார் முன்னிலை வகிக்கிறார்கள்..? வான்கடேயில் இரு அணிகளின் நேருக்கு நேர் சாதனை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மும்பை vs சென்னை இதுவரை நேருக்குநேர்:

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை மொத்தமாக 38 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே 4 ஐபிஎல் இறுதிப்போட்டிகளும் நடந்துள்ளன. 38 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இறுதிப்போட்டிகளை பற்றி பேசுகையில் சென்னை அணி 1 முறையும், மும்பை அணி 3 முறையும் வென்றுள்ளது.

சென்னை அணிக்கு எதிராக மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோராக 219 ரன்களும், மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோராக 218 ரன்களும் பதிவாகியுள்ளது.

வான்கடே ஸ்டேடியத்தில் இரு அணிகளும் எப்படி..?

ஐபிஎல் வரலாற்றில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே 12 போட்டிகள் நடந்துள்ளன. இதிலும், மும்பை இந்தியன்ஸ் அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இருப்பினும், கடந்த 2 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை அணிக்கு எதிராக தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. இதுவரை நடந்த 12 போட்டிகளில் மும்பை 7 போட்டிகளிலும், சென்னை 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 10 போட்டிகளில் எந்த அணி ஆதிக்கம்..?

ஐபிஎல்லில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த கடைசி 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முன்னிலை வகிக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 7 முறையும் மும்பை அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி கடைசியாக எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அந்தவகையில், இன்று எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தால், தொடர்ச்சியான 5வது வெற்றியை பதிவு செய்யும்.

களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்
களைகட்டும் மதுரை சித்திரைத்திருவிழா 2025: முன்னேற்பாடுகள் தீவிரம்...
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!
தொடர்ந்து சாதனை படைக்கும் அஜித்... பெல்ஜியம் ரேஸிலும் வெற்றி!...
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!
திருச்சி: குடிநீரில் கலந்த கழிவு நீர்? அடுத்தடுத்து 4 பேர் பலி..!...
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!
டார்ச்சர் செய்த வருங்கால மனைவி - உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர்!...
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி
துணை வேந்தர்கள் மாநாடு: முதலமைச்சர் ஸ்டாலின் vs ஆளுநர் ரவி...
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?
லாப நோக்கற்றது.. பதஞ்சலியில் ரோஜா சர்பத் ஏன் உருவானது தெரியுமா?...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்...
மீண்டும் சினிமாவில் ரீ - என்ட்ரி கொடுக்கும் நடிகர் அப்பாஸ்......
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!
சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகமான வீரர்கள் பட்டியல்!...
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!
என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன - சீமான்!...
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?...
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்
பம்பாய் படம் இப்போ ரிலீஸ் ஆனா தியேட்டரே பத்தி எரியும்...