கங்குலியின் விக்கெட் சர்ச்சை – தவறை ஒப்புக்கொண்ட மொயின் கான் – வைரலாகும் வீடியோ

கங்குலியின் விக்கெட் அப்போது பெரிதும் சர்ச்சையானது. சாக்லைன் போட்ட பந்தை மோயின் கான் கேட்ச் பிடிக்க கங்குலி அவுட்டானார். அந்த பந்து மொயின் கான் பிடிப்பதற்கு முன் தரையில் பட்டதாக சர்ச்சை உருவானது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக், கங்குலி அவுட்டானது தவறானது என ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கங்குலியின் விக்கெட் சர்ச்சை - தவறை ஒப்புக்கொண்ட மொயின் கான் - வைரலாகும் வீடியோ

மொயின் கான் - சௌரவ் கங்குலி

Published: 

05 Apr 2025 20:04 PM

கடந்த 1999 ஆம் ஆண்டு இந்திய அணி (India) பாகிஸ்தானை 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டது. இந்த தொடரில் ஒரு போட்டியில் பாகிஸ்தானும் (Pakistan) இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றதால் இந்த தொடர் சமனில் முடிந்தது. இதில் முதல் போட்டியானது ஜனவரி 28 முதல் ஜனவரி 31, 1999 வரை சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்க்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக மொயின் கான் (Moin Khan) 60 ரன்களும், முகமது யூசுப் 53 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அணில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளையும் ஜவகல் ஸ்ரீநாத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் பந்து வீசிய சச்சின் தன் பங்குக்கு முகமது யூசுப்பின் விக்கெட்டை எடுத்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்கிஸ் விளையாடிய இந்திய அணியில் அதிக பட்சமாக டிராவிட் 53 ரன்களும் கங்குலி 54 ரன்களும் இன்று ஐபிஎல் போட்டிகளில் விமர்சகராக இருக்கும் சடகோபன் ரமேஷ் 43 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் எடுத்து 16 ரன்கள் பாகிஸ்தானை விட முன்னிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடிய சாஹித் அஃப்ரிடி 141 ரன்களும் இன்சமாம் உல்-ஹக் 51 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தனர்.

சர்ச்சைக்குள்ளான கங்குலியின் விக்கெட்

270  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சார்பாக சச்சின் 136 ரன்களும், நயன் மோங்கியா 52 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்க தவற, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கங்குலி 2 ரன்களில் வெளியேறினார்.

கங்குலி அவுட்டானது தவறு என ஒப்புக்கொண்ட இன்சமாம்

 

கங்குலியின் விக்கெட் அப்போது பெரிதும் சர்ச்சையானது. சாக்லைன் போட்ட பந்தை மொயின் கான் கேட்ச் பிடிக்க கங்குலி அவுட்டானார். அந்த பந்து மொயின் கான் பிடிப்பதற்கு முன் தரையில் பட்டதாக சர்ச்சை உருவானது. இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக், கங்குலி அவுட்டானது தவறானது என ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரது பேசியதாவது, அன்று எனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் விளையாடவில்லை எனக்கு பதிலாக அசார் முகமது களத்தில் இருந்தார். ஆனால் அந்த கேட்ச் சந்தேகத்திற்கு உரியது என ஒப்புக்கொள்ள முடியும் என்றார்.

தவறை ஒப்புக்கொண்ட மொயின் கான்

கங்குலியின் கேட்சை பிடித்த மொயின் கானின் பேட்டி ஒன்று வைரலாகிவருகிறது. அவரது பேசியதாவது, அந்த கேட்சை நான் தான் பிடித்தேன். இப்போவும் கங்குலி கோவமாக தான் இருப்பார். காரணம் அது சர்ச்சைக்குரிய கேட்ச். சாக்லைன் போட்ட பந்தை கங்குலி பின் பக்கம் அடித்தார். செல்லிங் பாயிண்ட்ல அசர் முகமது இருந்தார். கங்குலி அடிச்சது சரியான பஞ்ச் ஷாட். பந்து மேல போச்சு. நான் டைவ் அடிச்சு கேட்ச் பிடிச்சேன். ரொம்ப கான்ஃபிடன்டா இருந்தேன். யாருக்குமே தெரியாது அந்த பந்து கீழே பிட்ச்சாகிடுச்சுனு. அம்பயர் லெக் அம்பயரிடம் சென்று திரும்பி வந்து அவுட் கொடுத்துட்டாரு என்று பேசியிருந்தார்.