India’s Tour of Bangladesh 2025: வங்கதேசம் செல்லும் இந்திய அணி.. ODI, T20 தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

India vs Bangladesh Cricket Series 2025: பிசிசிஐ 2025 ஆகஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேச சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகள் ஆகஸ்ட் 17 முதல் 23 வரை மிர்பூர் மற்றும் சிட்டகாங்கில் நடைபெறும். டி20 தொடர் ஆகஸ்ட் 26 முதல் 31 வரை சிட்டகாங் மற்றும் மிர்பூரில் நடைபெறும்.

Indias Tour of Bangladesh 2025: வங்கதேசம் செல்லும் இந்திய அணி.. ODI, T20 தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

இந்தியா Vs வங்கதேசம்

Published: 

15 Apr 2025 15:40 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றனர். இதன்பிறகு, இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) எந்த தொடரில் யாருடன் விளையாடும் என்ற கேள்வி இருந்த நிலையில், அதற்கான விடையை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை பிசிசிஐ (BCCI) 2025 ஏப்ரல் 15ம் தேதியான இன்று வெளியிட்டது. அதன்படி, வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர் 2025 ஆகஸ்ட் 17ம் தேதி முதலும், டி20 தொடர் 2025 ஆகஸ்ட் 26ம் தேதி முதலும் தொடங்குகிறது.

ஒருபோட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது..?

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டி 2025 ஆகஸ்ட் 17ம் தேதி மிர்பூரில் உள்ள ஷெர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும், 2வது ஒருநாள் போட்டி இந்த ஸ்டேடியத்தில் 2025 ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 2025 ஆகஸ்ட் 23ம் தேதி சிட்டகாங்கில் நடைபெறுகிறது.

டி20 போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது..?

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, டருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை சிட்டகாங்கில் நடைபெறும். இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை மிர்பூரில் உள்ள ஷெர்-இ-வங்காளதேச மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டியும் மிர்பூரில் நடைபெறும்.டருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி 2025 ஆகஸ்ட் 26ம் தேதி சிட்டகாங்கில் நடைபெறும். 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 29ம் தேதி மிர்பூரில் உள்ள ஷெர்-இ-வங்காளதேச மைதானத்தில் நடைபெறும். 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் மிர்பூரில் உள்ள ஷெர்-இ-வங்காளதேச மைதானத்தில் நடைபெறும்.

முழு போட்டி அட்டவணை:

இந்தியா vs வங்கதேசம் ஒருநாள் தொடர் 2025 அட்டவணை

ஆகஸ்ட் 17- எஸ்.பி.என்.சி.எஸ், மிர்பூர்
ஆகஸ்ட் 20- எஸ்.பி.என்.சி.எஸ், மிர்பூர்
ஆகஸ்ட் 23- BSSFLMRCS, சிட்டகாங்

இந்தியா vs வங்கதேசம் டி20 தொடர் 2025 அட்டவணை

ஆகஸ்ட் 26- BSSFLMRCS, சிட்டகாங்
ஆகஸ்ட் 29- எஸ்.பி.என்.சி.எஸ், மிர்பூர்
ஆகஸ்ட் 31- எஸ்.பி.என்.சி.எஸ், மிர்பூர்

வங்கதேசத்திற்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி:

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2022/23 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் ஒருநாள் தொடரில் விளையாடியது. அப்போது வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. ரோஹித் சர்மாவின் தலைமையில், இந்தியா தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. டி20 தொடரைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.