Gautam Gambhir Death Threat: பஹல்காம் தாக்குதலின்போது குறிவைக்கப்பட்ட கவுதம் கம்பீர்.. 2 முறை தேடி வந்த கொலை மிரட்டல்!
Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு 'ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்' அமைப்பிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இரண்டு மின்னஞ்சல்கள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கம்பீர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு இந்தியா முழுவதும் அனுசரித்து வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கவுதம் கம்பீருக்கு (Gautam Gambhir) ‘ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர்’ அமைப்பிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதில் மேலும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், 2 நாட்களுக்கு முன்பு அதாவது 2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை கொடூரமாக கொன்ற நேரத்தில், கவுதம் கம்பீருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது.
காவல்துறையில் புகார்:
கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்த பிறகு, நேற்று அதாவது 2025 ஏப்ரல் 24ம் தேதி டெல்லி போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். அப்போது. கவுதம் கம்பீர் தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அச்சுறுத்தலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு டெல்லி காவல்துறை இந்த விஷயத்தை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மிரட்டலில் என்ன இருந்தது..?
Former BJP MP and current head coach of the Indian cricket team, Gautam Gambhir, received a death threat from ‘ISIS Kashmir’. On Wednesday, he approached the Delhi Police, filing a formal complaint for an FIR and seeking measures to safeguard his family’s security: Office of… pic.twitter.com/MEG26UIwFh
— ANI (@ANI) April 24, 2025
கிடைத்த தகவலின்படி, 2025 ஏப்ரல் 22ம் தேதி கவுதம் கம்பீருக்கு இரண்டு விதமான மிரட்டல் மின்ன்சஞ்சல்கள் வந்துள்ளது. ஒன்று தாக்குதல் நடந்த மத்திய நேரத்திலும், மற்றொன்று மாலையிலும் வந்துள்ளது. இந்த இரண்டு மின்னஞ்சல்களிலும் “ஐ கில் யூ” என்று எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் கம்பீர் இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கவுதம் கம்பீர் பாஜக எம்பியாக இருந்தபோது இதேபோன்ற மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்தது.
கவுதம் கம்பீர் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கம்பீர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்குப் பொறுப்பானவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியா தாக்கும்.” என்று எழுதியிருந்தார்.
இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் திரும்புவது எப்போது..?
ஐபிஎல் தொடருக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அந்த சுற்றுப்பயணத்திலிருந்து கவுதம் கம்பீர் மீண்டும் தனது பயிற்சி பொறுப்புகளை கையில் எடுப்பார். 2025 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு, கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. இருப்பினும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தவறவிட்டது.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும். இந்தத் தொடர் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடைபெறும். இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியை தயார்படுத்துவதிலும், அதை வெல்வதிலும் மட்டும் கம்பீர் கவனம் செலுத்துவார்.
2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை ஒப்பந்தம்:
இந்திய அணியுடன் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை உள்ளது. அவரது பயிற்சியின் கீழ் கம்பீர் ஒரு ஐசிசி சாம்பியன் டிராபி பட்டத்தை வென்றுள்ளார். மேலும், எதிர்காலத்தில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.