ICC Women’s World Cup 2025: மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது..? இந்தியாவில் எங்கு நடைபெறுகிறது..?

2025 Women's Cricket World Cup: எட்டு அணிகள் பங்கேற்கும் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2025 செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இந்த போட்டிகள் அனைத்தும் இந்தூர், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், குவஹாத்தி மற்றும் முல்லன்பூர் (சண்டிகர்) ஆகிய இடங்களில் நடத்தப்படும். முல்லன்பூரில் இறுதிப்போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. 

ICC Womens World Cup 2025: மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது..? இந்தியாவில் எங்கு நடைபெறுகிறது..?

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை

Updated On: 

06 Apr 2025 02:54 AM

 IST

2023 ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை (ICC Women’s World Cup 2025) தொடர்ந்து 2025 மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் மீண்டும் நடைபெறவுள்ளது. அதன்படி, 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், மீதமுள்ள போட்டிகள் வெவ்வேறு நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களில் நடைபெறும். கடந்த 2025 மார்ச் 22, தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற பிசிசிஐயின் (BCCI) உச்ச மன்றக் கூட்டத்தின் போது, ​​சுமார் மூன்று வாரங்கள் விளையாடப்படவுள்ள இந்த உலகக் கோப்பை போட்டிக்கு 5 வெவ்வேறு நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முல்லன்பூர், இந்தூர், திருவனந்தபுரம் மற்றும் குவஹாத்தி ஆகிய நகரங்களில் உள்ள ஸ்டேடியங்களை பட்டியலிட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் போட்டியை தவிர, மீதமுள்ள போட்டிகள் இந்த மைதானங்களில் நடைபெறும். மும்பை மற்றும் வதோதராவில் உள்ள ஸ்டேடியங்களில் சமீபத்தில் முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் நடந்ததால், இந்த இரண்டு இடங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு பகுதிகளிலும் வழக்கமாக அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. எனவே அந்த இரண்டு இடங்களிலும் எந்த போட்டிகளையும் நடத்த வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை எப்போது தொடங்குகிறது..?<


எட்டு அணிகள் பங்கேற்கும் 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2025 செப்டம்பர் 29ம் தேதி தொடங்கி 2025 அக்டோபர் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இந்த போட்டிகள் அனைத்தும் இந்தூர், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், குவஹாத்தி மற்றும் முல்லன்பூர் (சண்டிகர்) ஆகிய இடங்களில் நடத்தப்படும். முல்லன்பூரில் இறுதிப்போட்டி திட்டமிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மகளிர் அணி பங்கேற்குமா..?

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால், இந்தப் போட்டியும் 2025 சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது போல் ஹைபிரிட் மாடலில் நடத்தப்படும். ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே, இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு போட்டிக்கும் அணியை அனுப்ப மாட்டோம் என்றும், ஹைபிரிட் மாடலில்தான் உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்திருந்தது. இந்தப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றால், பிசிசிஐ இந்தப் போட்டியை இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் நடத்த வேண்டியிருக்கும். அதாவது, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற 8 அணிகள் இந்தியாவில் விளையாடும். பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி மட்டும் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும்.

YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது
23 ஆண்டுகள் நீண்ட திருமணம்.. வெள்ளை பூண்டு, வெங்காயத்தால் பிரிந்த சம்பவம்..
செல்ஃபி எடுக்க முயன்று 130 அடி பள்ளத்தாக்கில் விழுந்த நபர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
அமெரிக்காவில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் - இந்திய வம்சாவளி இளைஞர் கைது