Highest Test Cricket Scores: டெஸ்டில் அதிகபட்ச ஸ்கோர்! இலங்கை தொடர்ந்து முதலிடம்.. இந்திய அணி எத்தனையாவது இடம்?
Record-Breaking Test Scores: மிகவும் மறக்கமுடியாத சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ஒன்று பாகிஸ்தான் உள்ள முல்தான் ஸ்டேடியத்தில் (அக்டோபர் 2024) இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ஸ்கோரை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களாக ஹாரி புரூக்கின் முச்சதம் (317) மற்றும் ஜோ ரூட்டின் 262 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு 823/7 என்ற ரன்களை கொடுத்தது.

கிரிக்கெட் (Cricket) என்பது முன்பு டெஸ்ட் (Test Match) போட்டிகளாகவே விளையாடப்பட்டு வந்தது. காலப்போக்கில் அது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளாக உருவெடுத்தது. டெஸ்ட் வரலாற்றில் சில அணிகள் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 900 மற்றும் 800 ரன்களை எடுத்தனர். விளையாட்டின் மிகச் சிறந்த மைல்கற்களில் ஒன்று 1997 ஆம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 952/6 ரன்கள் எடுத்தது, இது கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்த சாதனை இன்னும் எந்த அணியாலும் முறியடிக்கவில்லை. அதன்பிறகு, இங்கிலாந்து அணி 1938ம் ஆண்டு ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 903/7 ரன்கள் எடுத்தது, இது இதுவரை பதிவு செய்யப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இந்தநிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரின் எண்ணிக்கை எந்த அணியால் எப்போது அடிக்கப்பட்டது என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.
1958ம் ஆண்டில், கிங்ஸ்டனில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 790/3 ரன்கள் எடுத்தது. இதேபோல், 1955 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 758/8 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இந்திய அணியை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் களமிறங்கிய கருண் நாயர் அதிரடியாக விளையாடி 303 ரன்கள் அடித்து தனது முச்சதத்தை பதிவு செய்தார்.
டெஸ்ட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்:
அணி | ஸ்கோர் | ஓவர்கள் | எதிரணி | ஸ்டேடியம் | போட்டி நாள் |
இலங்கை | 952/6 | 271 | இந்தியா | கொழும்பு | 2 ஆகஸ்ட் 1997 |
இங்கிலாந்து | 903/7 | 335.2 | ஆஸ்திரேலியா | ஓவல் | 20 ஆகஸ்ட் 1938 |
இங்கிலாந்து | 849 | 258.2 | வெஸ்ட் இண்டீஸ் | கிங்ஸ்டன் | 3 ஏப்ரல் 1930 |
இங்கிலாந்து | 823/7d | 150 | பாகிஸ்தான் | முல்தான் | 7 அக்டோபர் 2024 |
வெஸ்ட் இண்டீஸ் | 790/3d | 208.1 | பாகிஸ்தான் | கிங்ஸ்டன் | 20 பிப்ரவரி 1958 |
பாகிஸ்தான் | 765/6d | 248.5 | இலங்கை | கராச்சி | 21 பிப்ரவரி 2009 |
இலங்கை | 760/7d | 202.4 | இந்தியா | அகமதாபாத் | 16 நவம்பர் 2009 |
இந்தியா | 759/7d | 190.4 | இங்கிலாந்து | சென்னை | 16 டிசம்பர் 2016 |
ஆஸ்திரேலியா | 758/8d | 245.4 | வெஸ்ட் இண்டீஸ் | கிங்ஸ்டன் | 11 ஜூன் 1955 |
இலங்கை | 756/5d | 185.1 | தென்னாப்பிரிக்கா | கொழும்பு | 27 ஜூலை 2006 |
சமீபத்திய அதிக டெஸ்ட் ஸ்கோர்:
மிகவும் மறக்கமுடியாத சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் ஒன்று பாகிஸ்தான் உள்ள முல்தான் ஸ்டேடியத்தில் (அக்டோபர் 2024) இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ஸ்கோரை பதிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்களாக ஹாரி புரூக்கின் முச்சதம் (317) மற்றும் ஜோ ரூட்டின் 262 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு 823/7 என்ற ரன்களை கொடுத்தது. இந்த ரன் எண்ணிக்கை மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது அதிகபட்ச அணி ஸ்கோராக மாறியுள்ளது.