‘வந்தார் வென்றார்’ – வாஷிங்டன் சுந்தர் அதிரடி – சுந்தர் பிச்சைக்கு பதிலளித்த குஜராத் டைட்டன்ஸ்
Gujarat Titans: கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வாஷிங்டன் சுந்தர் குஜராத் போட்டியில் இடம்பெறாதது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், 'இந்திய அணியில் இடம்பெற்ற ஒருவர், எப்படி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பார் ?' என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, 'எனக்கும் அது ஆச்சரியமாகவே இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் (IPL) 2025 தொடரின் ஏப்ரல் 6, 2025 அன்று நடைபெற்ற 19 வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) அணியும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசரஸ் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதன் முதலில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி, 2 சிக்சர் என 29 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இதுவரை தன்னை பயன்படுத்தாமல் இருந்த அணிக்கு தனது பேட்டிங் மூலம் திறமையை நிரூபித்தார். தமிழ்நாட்டை சேர்ந்தவரான வாஷிங்கடன் சுந்தர் இதற்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் இடம்பெற்றிருந்தார். இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பங்கேற்றிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்கடன் சுந்தர் இந்திய அணியின் சார்பாக இதுவரை 54 இருபது ஓவர் போட்டிகளிலும், 23 ஒரு நாள் போட்டிகளிலும், 9 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீசனில் குஜராத் விளையாடிய 3 போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடையே இருந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 6, 2025 அன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தான் முதலில் களமிறக்கப்பட்டார். அதிரடியாக ஆடி 49 ரன்கள் குவித்து குஜராத் அணி 153 ரன்களை சேஸ் செய்வதற்கு பெரிதும் உதவினார். இந்த நிலையில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் தேர்வு குழுவுக்கு தனது திறமையை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர்.
வாஷிங்டன் சுந்தர் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறக்கப்பட காரணம்?
Sundar came. Sundar conquered. https://t.co/CjOOtEhBBV
— Gujarat Titans (@gujarat_titans) April 6, 2025
மேலும் வாஷங்டன் சுந்தர் ஏற்கனவே ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்தார். அங்கும் அவர் குறைவாகவே பயன்படுத்தப்பட்டார். இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டம் என்பதாலும் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது என்பதாலும் அந்த அணியின் பலம், பலவீனம் அவருக்கு தெரியும் என்பதால் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
சுந்தர் பிச்சையின் சந்தேகத்துக்கு பதிலளித்த குஜராத் டைட்டன்ஸ்
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் வாஷிங்டன் சுந்தர் குஜராத் போட்டியில் இடம்பெறாதது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய அணியில் இடம்பெற்ற ஒருவர், எப்படி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பார் ?’ என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ‘எனக்கும் அது ஆச்சரியமாகவே இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் விமர்சனத்துக்கு சரியாக பத்து நாட்கள் கழித்து பதிலளித்திருக்கிறது குஜராத் டைட்டன்ஸ். அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள குஜராத் அணி, வந்தார் வென்றார் என பதிலளித்துள்ளது. இதனையடுத்து வாஷிங்டன் சுந்தருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.