RR vs DC: கேப்டனாக 2 பெரும் தவறுகளை செய்த சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்விக்கு காரணம் என்ன?

Sanju Samson's Costly DRS Blunders: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்று பரபரப்பாக முடிந்தது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் செய்த 2 பெரும் தவறுகள் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

RR vs DC: கேப்டனாக 2 பெரும் தவறுகளை செய்த சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்விக்கு காரணம் என்ன?

கே.எல்.ராகுல் - சஞ்சு சாம்சன்

Published: 

17 Apr 2025 14:55 PM

ஐபிஎல் (IPL) 2025 சீசனில் ஏப்ரல் 16, 2025 அன்று டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Captials) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணிகளுக்கு இடையே நடந்த போட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 188 ரன்கள் எடுத்தது. அதுவும் அந்த அணியின் 20 ஓவரை எதிர்கொண்ட விதம் திரில்லர் படங்களை பார்ப்பது போல மிகவும் பரபரப்பாக அமைந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் முதல் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி, 1 ரன் எடுத்தால் டிரா என்ற நிலையில், ஸ்டார்க் வீசிய கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க முயன்று ரன் அவுட்டானார். அந்த பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஹெட்மயர் மற்றும் ரியான் பராக் களமிறங்கினர். நித்திஸ் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கும்போது ஹெட்மயர் ரியான் பராக் களமிறங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேப்டனாக சஞ்சு சாம்சனின் இந்த முடிவு விமர்சனத்திற்குள்ளானது. அதற்கேற்றபடி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல் அணி 0.5 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஸ்டப்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் 0.4 ரன்களிலேயே இலக்கை எட்டி தங்கள் அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸின் சாதனை

இதனையடுத்து ஐபிஎல் வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிபெற்ற அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெற்றது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 முறை வென்றிருக்கிறது. சூப்பர் ஓவரில் 4 முறை அந்த அணி வெற்றிபெற்றிருக்கிறது.

கேப்டனாக சஞ்சு சாம்சன் செய்த தவறுகள்

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டிஆர்எஸ் முடிவுகளை தவறாக எடுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. 13வது ஓவரில் ஆர்ச்சரின் பந்தில் அபிஷேக் போரல், விக்கெட் கீப்பரின் மேல் அடிக்க முயன்றார். அவர் பந்தை அடித்தது போலவே தெரிந்தது. அப்போது சஞ்சு சாம்சன் அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரிப்ப்ளேவில் சிறிய எட்ஜ் இருந்தது தெளிவாக தெரிந்தது. சாம்சன் DRS எடுத்திருந்தால் அவுட் கிடைத்திருக்கும். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக, அடுத்த ஓவரில் ஹசரங்கா, போரலை 49 ரன்களில் அவுட் செய்தார்.

அதே போல 18வது ஓவரில், சந்தீப் சர்மா ஒரு பவுன்சர் வீசிய போது,அசுதோஷ் சர்மா அடிக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டதா என்ற சர்ச்சை இருந்தது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் திடீர் அப்பீல் செய்தார். ரிப்ளையில் பந்து பேட்டுக்கு எட்டவில்லை என்பது தெளிவாக இருந்தது. சஞ்சு சாம்சனின் இந்த இரண்டு தவறுகளும் ரசிகர்களிடம் விமர்சனங்களை எழுப்பியுள்ளன.