CSK IPL 2025: கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக சிஎஸ்கே வீரர்கள் செய்த காரியம்.. என்ன நடந்தது?

Devon Conway's Father Passes Away: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வேயின் தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஐபிஎல் 2025ல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டையுடன் களமிறங்கியது அஞ்சலி. தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது. காயம் காரணமாக கேப்டன் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தோனி தலைமையில் வெற்றிக்கான போராட்டம் தொடர்கிறது.

CSK IPL 2025: கைகளில் கருப்பு பட்டை! கான்வேக்காக சிஎஸ்கே வீரர்கள் செய்த காரியம்.. என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ்

Published: 

22 Apr 2025 19:22 PM

கடந்த 2025 ஏப்ரல் 20ம் தேதி ஐபிஎல் 2025ன் (IPL 2025) 38வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் மோதியது. இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கைகளில் கருப்பு பட்டை அணிந்து மைதானத்திற்குள் நுழைந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணியினர் மற்றும் ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இது ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் போட்டியில் செய்யப்படும் ஒரு விஷயமாகும். மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகுதான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேயின் (Devon Conway) தந்தை காலமானார் என்று தெரியவந்தது.

டெவோன் கான்வேயின் தந்தை மறைவு:

மும்பை அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழாவைத் தொடங்குவதற்கு முன், ஹர்ஷா போக்லே கான்வேயின் பெயரைச் சொல்லி அவருக்கு ஆறுதல் கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவோன் கான்வே விளையாடவில்லை. கான்வே இப்போது தனது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்ய நியூசிலாந்து சென்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த தகவலை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டு கான்வேயின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியது. அதில், டெவோன் கான்வேயின் தந்தை இறந்துவிட்டதாகவும், இந்த கடினமான நேரத்தில் நாங்கள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் நிற்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் சீசன் 18 ஐ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக 4 தோல்விகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு எம்எஸ் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கொண்டார். தோனி தலைமையில் ஐபிஎல் 2025ல் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வியையும், லக்னோ அணிக்கு எதிராக வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப்க்கு செல்லுமா..?

எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப்களுக்குள் நுழைவது என்பது கடினமான விஷயமாகும். சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட ஐபிஎல் 2025 சீசனில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிவிடும். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக, புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்திலும் வென்றாலும் கூட, அதன் மொத்த புள்ளிகள் 16 ஆக உயரும். அப்போது, பிளே ஆஃப்க்குள் நுழைய மற்ற அணிகளை சென்னை அணி சார்ந்திருக்க வேண்டும்.