IPL 2025: தோல்வியை கண்டிராத டெல்லி.. வெற்றி பாதைக்கு திரும்புமா மும்பை..? பிட்ச் ரிப்போர்ட் இதோ!

Delhi Capitals vs Mumbai Indians: ஐபிஎல் 2025ன் 29வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 4 வெற்றிகளுடன் சிறப்பாக செயல்படுகிறது, மும்பை ஒரே வெற்றியுடன் பின்தங்கியுள்ளது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்-சாதகமான ஆடுகளம் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள், இரு அணிகளின் பிளேயிங் 11 மற்றும் ஹெட்-டு-ஹெட் சாதனைகள் ஆகியவை இந்தப் போட்டிக்கான முன்னோட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

IPL 2025: தோல்வியை கண்டிராத டெல்லி.. வெற்றி பாதைக்கு திரும்புமா மும்பை..? பிட்ச் ரிப்போர்ட் இதோ!

டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்

Published: 

13 Apr 2025 11:31 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 29வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே இன்று அதாவது 2025 மார்ச் 13ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மோதுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை டெல்லி கேபிடல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற முயற்சிப்பார்கள். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் 11, வானிலை மற்றும் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

டெல்லியின் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தின் ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இது சிறிய மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்கள் இங்கு நிறைய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இந்த பிட்ச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை அதிகமாக எடுக்கவும் வாய்ப்புள்ளது. இங்கு சராசரி ஸ்கோர் 166 ரன்கள் ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 89 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு முதலில் பேட்டிங் செய்த அணி 42 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த 46 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, எந்த அணி டாஸ் வென்றாலும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும்.

வானிலை எப்படி..?

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தரையில் 51 சதவீத ஈரப்பதம் இருக்க வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் காற்று மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். போட்டியின் போது வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கலாம்.

ஹெட் டூ ஹெட்:

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 35 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், மும்பை 19 போட்டிகளிலும், டெல்லி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிவிவரங்களை பார்த்தால் மும்பை அணி ஆதிக்கம் நிறைந்த அணியாக தெரிந்தாலும், இந்த சீசனில் டெல்லி அணியே பலம் வாய்ந்த அணியாக உள்ளது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

டெல்லி கேபிடல்ஸ்:

ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், அபிஷேக் போரல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விபர்ஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.