CSK’s Low IPL Score: சொதப்பிய சிஎஸ்கே! எடுபடாத தோனி கேப்டன்ஷி.. சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர் பதிவான சோகம்!

Chennai Super Kings Lowest First Innings Score: ஐபிஎல் 2025 போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இது சென்னை அணியின் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர். சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்லில் இதுவே இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோர். சுனில் நரைன் 3 விக்கெட்டுகளுடன் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் மிகவும் சொதப்பியது.

CSKs Low IPL Score: சொதப்பிய சிஎஸ்கே! எடுபடாத தோனி கேப்டன்ஷி.. சேப்பாக்கத்தில் குறைந்த ஸ்கோர் பதிவான சோகம்!

எம்.எஸ்.தோனி - ஜடேஜா

Published: 

11 Apr 2025 22:50 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (Chennai Super Kings ),கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2வது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இது மட்டுமல்லாமல், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்லில் எந்தவொரு அணியும் எடுத்த 2வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக இந்த மைதானத்தில், 2019 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சொதப்பிய பேட்டிங் ஆர்டர்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. சுனில் நரைன், மொயீன் அலி மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்பட்டதால் சென்னை அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் பேட்டிங் மிகவும் மோசமாக அமைந்து 20 ஓவர்கள் பேட்டிங் செய்து 8 பவுண்டரிகள் மற்றும் ஒரே ஒரு சிக்ஸரை மட்டுமே பதிவு செய்தனர். மேலும், 5 சென்னை பேட்ஸ்மேன்களால் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்ட முடியவில்லை, அதே நேரத்தில் இரண்டு பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி வெளியேறினர்.

விஜய் சங்கர் (29) மற்றும் சிவம் துபே (31) மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 20 ரன்களை எட்டினர்.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் பந்து வீச்சில் 4 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் நாயகனாக திகழ்ந்தார். ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஸ்கோர்:

கடந்த 2022ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதுவே, ஐபிஎல்லில் சென்னை அணியின் முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஸ்கோராகும். அதனை தொடர்ந்து, இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 109 ரன்களை முதல் இன்னிங்ஸில் பதிவு செய்தது. தொடர்ந்து, ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன்பின், 2012ம் ஆண்டு டெல்லி நடந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 

Related Stories
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!
MI vs CSK IPL 2025: சென்னைக்கு எதிராக ஆதிக்கம்! வான்கடேவில் விட்டு கொடுக்குமா மும்பை..? ஹெட் டூ ஹெட் முழு விவரம்!
IPL 2025: வான்கடேவுக்கு வந்த சென்னை..! சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா மும்பை..? வானிலை நிலவரம்!