Suresh Raina: சிஎஸ்கே தடுமாற்றத்துக்கு இதுவே காரணம்.. ஆதங்கப்பட்ட சுரேஷ் ரெய்னா..!
CSK's IPL 2025 Struggle: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் 2025 தோல்விகளை சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏலத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களைத் தேர்வு செய்யாமல், இளம் வீரர்களின் திறனை சரியாக பயன்படுத்தாததையும், அணியின் போதிய ஆக்ரோஷமற்ற போட்டித்திறனையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பிளே-ஆஃப் வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்கு எதிராக நேற்று அதாவது 2025 ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025ல் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6ல் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமை குறித்து, முன்னாள் இந்திய வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான சுரேஷ் ரெய்னா (Suresh Raina) பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.
வருத்தம் தெரிவித்த சுரேஷ் ரெய்னா:
மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னை அணி தோல்வியை சந்தித்தது. அப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையின்போது பேசிய சுரேஷ் ரெய்னா, “ஐபிஎல் 2025 ஏலத்திலன்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கைகளில் நிறைய பணம் இருந்தும் அனுபவம் நிறைந்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற வீரர்களை புறக்கணித்தது. அதேபோல், ஏலத்தில் பிரியான்ஸ் ஆர்யா போன்ற ஏராளமான இளம் மற்றும் திறமையான வீரர்களையும் எடுக்கவில்லை.
சுரேஷ் ரெய்னா பேசிய காட்சி:
Experts @ImRaina and @harbhajan_singh break down what’s gone wrong for CSK from the auction table to the pitch 📝
What are your views on the experts’ take? 🤔#IPLRevengeWeek 👉 #KKRvGT | MON, 21 APR, 6:30PM on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/WsQQcAe5tH
— Star Sports (@StarSportsIndia) April 21, 2025
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களை தேடவில்லை என்பதே, சென்னை அணி இப்படி விளையாடுவதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் மற்ற அணிகளை பார்க்கும்போது, அந்த அணி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். ஆனால், சென்னை அணி சண்டைவிடுவதை என்னால் பார்க்க முடியவில்லை. அதேபோல், ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்படி தடுமாறியதை நான் பார்த்ததில்லை” என்று தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங் கருத்து:
சுரேஷ் ரெய்னா இப்படி தெரிவித்ததற்கு மற்றொரு முன்னாள் சென்னை வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தையும் முன்வைத்தார். அப்போது பேசிய அவர், “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளம் வீரர்களில், போட்டியை மாற்றும் இன்னிங்ஸை விளையாடக்கூடிய எந்த வீரரையும் நான் பார்த்ததில்லை. சென்னை அணிக்காக புதிய திறமையை தேடுபவர்களிடம், ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் நிர்வாகத்திற்கு சரியான தகவலை கொடுத்தார்களா என்றும் கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.