CSK Replacement Player: கெய்க்வாட்டுக்கு பதிலாக யார்..? 17 வயது சிறுவனுக்கு கொக்கி..! பக்கா பிளானில் சிஎஸ்கே!
Ruturaj Gaikwad's Injury Shakes CSK: ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் ஐபிஎல் 2025ல் இருந்து விலகியதால், எம்.எஸ். தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இந்த இழப்பை ஈடு செய்ய 17 வயதான ஆயுஷ் மத்ரே அல்லது பிரித்வி ஷா போன்ற வீரர்கள் வாய்ப்பு வழங்கலாம். தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப் பாதையில் திரும்ப இந்த மாற்றங்கள் முக்கியமானதாக இருக்கும்.

இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் (IPL 2025) இன்று அதாவது 2025 ஏப்ரல் 11-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை எதிர்கொள்ள உள்ளது. இருப்பினும், இந்த போட்டிக்கு ஒருநாள் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய அடி விழுந்தது. முழங்கையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழு சீசனிலிருந்தும் விலகினார். அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 ஐபிஎல் சீசன் முழுவதும் எம்.எஸ்.தோனி தலைமை தாங்குவார் என அணி நிர்வாகம் அறிவித்தது. ர். தோனி தலைமைக்கு திரும்புவது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தாலும், இப்போது பெரிய கேள்வி என்னவென்றால்: பேட்டிங் வரிசையில் கெய்க்வாட்டுக்கு பதிலாக யார் வருவார் என்பதுதான்.
யார் அந்த திறமைசாலி..?
கேப்டன் கெய்க்வாட் பேட்ஸ்மேனாக விட்டுசென்ற இடத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 17 வயது மும்பை பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரேவுக்கு வாய்ப்பை கொடுக்கலாம். சிறிது நாட்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மத்ரேவை பயிற்சி மேற்கொள்ள அழைத்திருந்தது. அந்த நேரத்தில், ஆயுஷ் மத்ரே முழு உடல் தகுதியுடன் இல்லாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இப்போது ருதுராஜ் கெய்க்வாட் வெளியேறியதால் வலது கை பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரேவுக்கு கதவு திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆயுஷ் மத்ரே:
Ayush Mhatre went unsold in the IPL, but the 17-year-old looks very impressive when batting.
— Vipin Tiwari (@Vipintiwari952) December 3, 2024
ஐபிஎல் 2025ன் மெகா ஏலத்தில் ஆயுஷ் மத்ரேவை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. தற்போது, மத்ரேவின் ஃபார்ம் மற்றும் அச்சமற்ற அதிரடி ஆட்டம் ஐபிஎல் 2025 சீசனில் நுழைவதற்கு வாய்ப்பை கொடுத்துள்ளது. அதேநேரத்தில், பல ஆண்டு காலமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிரித்வி ஷா, ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போனார். அவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, ருதுராஜ் கெய்க்வாட் எந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை. மும்பை அணிக்கு எதிரான அரைசதம் அடித்த அவர், கடைசியாக பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வெற்றிக்காக போராடும் சிஎஸ்கே:
2025 ஐபிஎல்லின் 18வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறது. சென்னை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக சீசனை வெற்றியுடன் தொடங்கிய போதிலும், சிஎஸ்கே வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தவறி, தொடர்ச்சியான தோல்விகளுக்குள் சிக்கி கொண்டது.