CSK Playoff Chances: சென்னைக்கு பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளதா..? எம்.எஸ்.தோனி என்ன செய்ய வேண்டும்..?
Chennai Super Kings Playoffs: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்ப வெற்றியைத் தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்தது. தோனியின் தலைமையிலான அணி, லக்னோவை வீழ்த்தி 2வது வெற்றியைப் பெற்றது. இருப்பினும், பிளே ஆஃப் தகுதிக்கு மீதமுள்ள 7 போட்டிகளில் பெரும்பாலானவற்றை வெல்ல வேண்டும். நிகர ரன் ரேட்டும் முக்கியப் பங்கு வகிக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2025ல் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிகரமாக சீசனை தொடங்கியது. ஆனால், அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக தாங்கள் விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இது சென்னை மற்றும் தோனி (MS Dhoni) ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதன்படி, ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 6 போட்டிகளில் 1 வெற்றியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் தகுதி பெறுமா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றன. அதற்கான பதில்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
2வது வெற்றி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி மீண்டும் பொறுப்பேற்றதற்கு பிறகு, கடந்த 2025 ஏப்ரல் 14ம் தேதி சென்னை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 5 போட்டிகளில் தொடர் தோல்விகளை முடிவுக்கு கொண்டு வந்தார். சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமும், கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் கைகளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகினார்.
இதற்குபிறகு, கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்.எஸ். தோனி, லக்னோவில் உள்ள பி.ஆர்.எஸ்.ஏ.பி.வி. ஏகானா ஸ்டேடியத்தில் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு எதிராக 167 ரன்களை துரத்த உதவி செய்தார். இந்த வெற்றியை பெற்ற போதிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் ஒரே புள்ளிகளுடன் இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் மோசமான நிகர ரன் ரேட்டுடன் கடைசி இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது எப்படி..?
From the city of nawabs ✈️ to the city of Dreams! 💛 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/isIa80Z3P0
— Chennai Super Kings (@ChennaiIPL) April 16, 2025
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், 7 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன், , ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -1.276 உடன் தற்போது 10வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2025ல் சென்னை அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதம் உள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்றால், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் வரலாம். கடந்த 2024 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 புள்ளிகளுடன் தகுதி பெற்றது. எனவே, சென்னை அணிக்கு 5 வெற்றிகள் கூட போதுமானதாக இருக்கலாம். ஆனால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆஃப் சுற்று கணக்கு திட்டமிடப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், ஐபிஎல் 2025 பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் முதல் 2 இடங்களையும் பிடிக்கலாம். மற்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தினால், புள்ளிகளில் சமநிலை அமைந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிகர ரன் ரேட்டை பொறுத்து பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெறுமா இல்லையா என்பது தெரியும்.