CSK Playoff Scenario: சிஎஸ்கே ஐபிஎல் 2025ல் இருந்து வெளியேறிவிட்டதா..? பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும்?
CSK's IPL 2025 Struggle: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஐபிஎல் 2025ல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 9 போட்டிகளில் 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் தகுதிக்கு குறைந்தது 14 புள்ளிகள் தேவை. மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று, நிகர ரன் ரேட்டை (NRR) மேம்படுத்தினால் மட்டுமே CSK பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்கள் பற்றி இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

ஐபிஎல் 2025ல் (IPL 2025) சென்னை சூப்பர் கிங்ஸின் (Chennai Super Kings) மோசமான ஆட்டம் தொடர்ந்து வலம் வருகிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக நேற்று (25.04.2025) சென்னை அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில், சென்னை அணி ஹைதராபாத் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை. இதன் மூலம், சென்னை அணி தற்போது போட்டியில் 9 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதமூலம், 4 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளனர். எனவே, சென்னை அணி ஐபிஎல் 2025 சீசனில் வெளியேற்றப்படும் என்று கருதப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக சென்னை அணி இன்னும் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற முடியும். இதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா?
என்ன செய்ய வேண்டும்..?
நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 7வது தோல்வியை சந்தித்துள்ளது. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் 4 புள்ளிகளுடன் பத்து அணிகள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பொதுவாக பிளேஆஃப்களுக்கு தகுதி பெற குறைந்தது 16 புள்ளிகள் தேவையாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் அணிகளின் நிகர ஓட்ட விகிதம் (NRR) நன்றாக இருந்தால் 14 புள்ளிகளுடன் கூட அணிகள் தகுதி பெறுகின்றன. கடந்த ஐபிஎல் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றது.
கடந்த சீசனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், கடைசி ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பிளேஆஃப்களுக்குள் நுழைந்தது. 10 அணிகள் கொண்ட ஒரு போட்டியில், ஒரு அணி 14 புள்ளிகள் மற்றும் 7 வெற்றிகளுடன் ஐபிஎல் பிளேஆஃப்களுக்குள் நுழைந்தது இதுவே முதல் முறை. இதன் பொருள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் 14 புள்ளிகளைப் பெற மீதமுள்ள 5 போட்டிகளிலும் கட்டாய வெற்றி பெற வேண்டும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் நிகர ரன் ரேட்டை (NRR) மேம்படுத்த வேண்டும். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிகர ரன் ரேட் 1.302 ஆக உள்ளது. சில அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போல 14 புள்ளிகளைப் பெற்றால், சிறந்த நிகர ரன் ரேட் உள்ள அணிகள் பிளேஆஃப்களுக்குச் செல்லும். எனவே, இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வரவிருக்கும் போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை:
2025 ஏப்ரல் 30, பஞ்சாப் கிங்ஸ், சென்னை, இரவு 7.30 மணி,
2025 மே 3, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, இரவு 7.30 மணி,
2025 மே 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, இரவு 7.30 மணி,
2025 மே 12, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை, இரவு 7.30 மணி,
2025 மே 18, குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், பிற்பகல் 3.30 மணி.