Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Bihar’s Sports Revolution: அவமானம் டூ அடையாளம்.. பீகார் விளையாட்டு துறையை மாற்றிய தமிழன்.. 3 வருடத்தில் ஐபிஎஸ் ரவீந்திரன் சங்கரன் செய்த சாதனை!

Bihar Sports Transformation: 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தொடக்க விழாவின்போது, பீகார் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு ஷூ அல்லது ஜெர்சி இல்லாமல் அணிவகுத்து சென்றனர். அப்போது சிலர் செருப்புடனும், வெறுங்காலுடன் அணிவகுத்து சென்றனர். விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அப்போதைய குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.

Bihar’s Sports Revolution: அவமானம் டூ அடையாளம்.. பீகார் விளையாட்டு துறையை மாற்றிய தமிழன்.. 3 வருடத்தில் ஐபிஎஸ் ரவீந்திரன் சங்கரன் செய்த சாதனை!
ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன்Image Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2025 20:58 PM

2022ம் ஆண்டின் தொடக்கத்தில் பீகார் மாநில விளையாட்டு ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலாக (Director General of the Bihar State Sports Authority (BSSA)) ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரனை (IPS Raveendran Sankaran) பீகார் மாநில அரசு அறிவித்தது. ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன் நியமிக்கப்பட்டபோது பலரும் தண்டனை பணியாகவே நியமித்தனர். இதன் காரணமாக, ரவீந்திரன் சங்கரின் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதுதான் பீகார் மாநில விளையாட்டையே மாற்ற போகிறது அப்போது யாருக்கு தெரியவில்லை. 55 வயதான ரவீந்திரன் சங்கரனுக்கு பீகாரின் விளையாட்டு கலாச்சாரத்தை மாற்றுவதற்கான ஆர்வம் பிறந்தது.

பெரிய மாற்றம்:

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பீகார் மாநில விளையாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். பதக்க எண்ணிக்கையை பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் ஒரே ஒரு பெயர் ரவீந்திரன் சங்கர்தான். தமிழ்நாட்டை ஐபிஎஸ் அதிகாரியான ரவீந்திரன் சங்கரன் பீகார் விளையாட்டு வீரர்களை தத்தெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். தென் மாநில விளையாட்டு குடும்பத்தை சேர்ந்த ரவீந்திரன் சங்கரன், விளையாட்டு துறையில் பீகார் மாநிலத்தின் பிம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன்:

 

View this post on Instagram

 

A post shared by Tapan Rauth (@tapanrauth15)

2022ம் ஆண்டு பதவியேற்றதும் இவர், முதல் வேலையாக எல்லா விளையாட்டுகளிலும் திறமை வாய்ந்த பயிற்சியாளர்களை அழைத்து வந்தார். மேலும், பீகார் மாநில வீரர்கள் அதிகபட்ச பதக்கங்களை பெறக்கூடிய விளையாட்டுகளை கவனமாக தேர்ந்தெடுத்து, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க அரசாங்கத்துடன் இணைந்து கடுமையாக போராடினார்.

அவமானம் முதல் புதிய அடையாளம்:

2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தொடக்க விழாவின்போது, பீகார் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு ஷூ அல்லது ஜெர்சி இல்லாமல் அணிவகுத்து சென்றனர். அப்போது சிலர் செருப்புடனும், வெறுங்காலுடன் அணிவகுத்து சென்றனர். விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட அப்போதைய குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது.

அந்த நேரத்தில் அனைத்து செய்தி தாள்களிலும் ”பீகார் வீரர்கள் செருப்பு அணிந்திருந்தனர்”, “பதக்க வறட்சியுடன் மாநிலத்திற்கு மற்றொரு அவமானம்”, “பீகார் மாநிலம் விளையாட்டு வீரர்களை அவமானப்படுத்தியது” என்று வந்தது. இருப்பினும், 2002ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் பீகார் மாநிலம் ஒரு பதக்கத்தை வென்றது.

2022ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன் பதவியேற்றதிற்கு பிறகு, சமீபத்தில் உத்தரகண்டில் முடிவடைந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில், பீகார் 12 பதக்கங்களை (1 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம்) வென்றது. பெண்களுக்கான டிரிபிள் லான் பவுல்ஸ் போட்டியில் பீகார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெறும் முதல் பதக்கமாகும்.

கடந்த 2022ம் ஆண்டு பீகார் மாநிலம் தேசிய ரக்பி சாம்பியன்ஷிப்பை நடத்தியது மட்டுமல்லாமல், இளம் பெண் வீராங்கனைகள் 2 பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

பீகார் விளையாட்டு துறையின் வளர்ச்சி குறித்து பேசிய ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திரன் சங்கரன், “ எனது 27 ஆண்டுகால காவல் பணியையும், 3 ஆண்டுகால பீகார் மாநில விளையாட்டு ஆணையத்தின் இயக்குநராகவும் நான் என் கடமையை செய்து கொண்டிருந்தேன். இது என்றுமே எனக்கு வேலையாக தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டிலும் முக்கிய பங்கு:

பீகார் மாநில விளையாட்டு பட்ஜெட்டிலும் ரவீந்திரன் சங்கரன் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2022ல் பீகார் மாநில விளையாட்டு துறைக்கு ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்ட நிதி, 2024ம் ஆண்டு ரூ. 680 கோடியாக உயர்த்தப்பட்டது. மேலும், ஜனவரி 2024ல் கலை மற்றும் கலாச்சாரத் துறையிலிருந்து பிரித்து, மாநிலம் ஒரு தனி விளையாட்டுத் துறையை உருவாக்கியது. 2023ம் ஆண்டில் மட்டும், ரக்பி பெண்கள் உட்பட 71 வீரர்கள் அரசு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது ராஜ்கீரில் காவல் பயிற்சியில் உள்ளனர்.

மேலும், பீகாரின் விளையாட்டு ஆட்சேர்ப்புக் கொள்கை, உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பஞ்சாயத்து அளவிலான விளையாட்டுக் கழகங்களை நிறுவுதல் போன்ற மாற்றங்களை நிறுவனமயமாக்கும் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக ரவீந்திரன் சங்கரன் அறிமுகப்படுத்தினார்.

மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!
மகனுக்கு பதிலாக தவறுதலாக தந்தைக்கு நடந்த அறுவை சிகிச்சை!...
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!
10 வருடத்தைக் கடந்த துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி..!...
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !
கோடைகாலத்தில் குழந்தைகளை பாதிக்கும் 3 நோய்கள் !...
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா?...
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கோடைகாலத்தில் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!...
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?
உதடுகள் வறண்டு வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?...
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!
மணி ஹெய்ஸ்ட் படத்தின் தமிழ் ரீமேக்கா கேங்கர்ஸ் படம்?- சுந்தர் சி!...
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !
வெற்றிமாறன் வழிகாட்டுதலில் ஐபோனில் உருவாகும் சினிமா !...
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?
96 ஆண்டுகளாகக் குழந்தைகள் பிறக்காமல் இருக்கும் நாடு எது தெரியுமா?...
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!
குடியரசுத் தலைவர் கையால் அஜித் குமாருக்குப் பத்ம பூஷன் விருது!...
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி
மாமல்லபுரம்: ஏப்ரல் 18ல் இலவச சுற்றுலா அனுமதி...