IPL 2028: 2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்.. புதிய திட்டம் போடும் பிசிசிஐ!
IPL schedule 2028: பிசிசிஐ, 2028 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இது 2022 இல் 74 ஆக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. ஐபிஎல் தலைவர் அருண் துமல், ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் விளையாட இது வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார். இந்த முடிவு ஐசிசி மற்றும் பிசிசிஐயுடன் நடந்த ஆலோசனைகளின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வருகின்ற 2028ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2028 முதல் ஐபிஎல்லில் மொத்தம் 94 போட்டிகள் நடத்த பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல்லில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணிகள் இணைந்தன. தற்போது, முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில், 2028ம் ஆண்டு முதல் போட்டிகளில் எண்ணிக்கை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில், 2025 முதல் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை 84 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. ஆனால் போட்டி அட்டவணை மற்றும் ஒளிபரப்பாளர்களுடனான சிக்கல்கள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
ஐபிஎல் தலைவர் அருண் துமல் கூறியது என்ன..?
ஐபிஎல்லில் போட்டி எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ESPNCricinfoல் பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமல், “ ஐபிஎல் போட்டிகளை இன்னும் அடுத்தகட்ட லெவலிற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அதன்படி, ஐபிஎல் ஒரு சீசனில் இனி 74 இலிருந்து 84 அல்லது 94 போட்டிகளாக செல்லலாம். இதனால் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் உள்ளூர் மற்றும் வெளியூரில் விளையாட முடியும்.
ஐபிஎல் 2028 முதல் போட்டிகளின் எண்ணிக்கையை 94 ஆக உயர்த்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக பரிசீலித்து வருகிறது. நாங்கள் ஐ.சி.சி.யிலும், பி.சி.சி.ஐ.யிலும் விவாதித்து வருகிறோம். இருதரப்பு மற்றும் ஐ.சி.சி. நிகழ்வுகள், பிரான்சைஸ் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்பாக ரசிகர்களின் ஆர்வம் எவ்வாறு மாறி வருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, அதைப் பற்றி இன்னும் தீவிரமாகப் பேச வேண்டும், மேலும் விளையாட்டின் பங்குதாரர்களுக்கு அதிகபட்ச மதிப்பை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்.
94 போட்டிகள்:
🚨 94 MATCHES IN AN IPL SESSON. 🚨
– IPL Chairman hints at 94 matches a season from 2028. (Espncricinfo). pic.twitter.com/RBfGkoIHyC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 28, 2025
நாங்கள் டெஸ்ட் தொடரை விளையாடி ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்தோம், சாம்பியன்ஸ் டிராபியை விளையாடினோம், அதற்கு மேல் ஐபிஎல்லையும் விளையாடினோம். எனவே 2025 ஆம் ஆண்டில் 74 போட்டிகளிலிருந்து 84 போட்டிகளுக்குச் செல்வது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டது, ஆனால் அது சரியான நேரம் என்று நாம் நினைக்கும் போதெல்லாம், அது குறித்து (போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது) ஒரு முடிவை எடுப்போம்.” என தெரிவித்தார்.
ஐபிஎல் 2025 சீசன்:
ஐபிஎல் 2025 சீசன் குறித்து பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமல், “ஐபிஎல் 2025 சீசன் ஒரு வெற்றிகரமான சீசன். அணிகளிடையே போட்டி மனப்பான்மையையும், பல இளம் இந்திய வீரர்களின் எழுச்சியை இந்த சீசனில் பார்க்க முடிகிறது. இந்த முறை ஐபிஎல்லில் முதல் முறையாக பட்டத்தை வெல்லும் அணி சாம்பியனானால் நல்லது” என்று தெரிவித்தார்.