BCCI Restructuring: இந்திய அணியின் துணை ஊழியர்கள் ஏன் வெளியேற்றம்..? வெளிவந்த காரணம்..!
Indian Cricket Team Support Staff Cuts: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியின் துணை ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அபிஷேக் நாயர் (பேட்டிங்), டி திலீப் (ஃபீல்டிங்), சோஹம் தேசாய் ஆகியோர் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களின் பணிகளை ஏற்கனவே உள்ள பயிற்சியாளர்கள் ஏற்க உள்ளனர். பிசிசிஐ, தேவையற்ற துணை ஊழியர்களை குறைத்து குழுவைச் சுருக்கவும் முடிவு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்திய அணியின் துணை ஊழியர்களில் ஒரு சிலரை நீக்கப்போவதாக செய்திகள் வெளிவருகிறது. கிடைத்த தகவலின்படி, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குழுவில் இனிமேல் ஒரு சிலரை மட்டுமே பார்க்க முடியும் என்றும், குழு சிறியதாகவே இருக்க போகிறது என்றும் கூறப்படுகிறது. அதன்படி, விரைவில் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் (Abhishek Nair), பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் மற்றும் சோஹம் தேசாய் (Soham Desai) ஆகியோர் விரைவில் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ துணை ஊழியர்களை ஏன் நீக்க விரும்புகிறது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
IANS வெளியிட்ட தகவலின்படி, பிசிசிஐயில் உள்ள சில வாரிய உறுப்பினர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இத்தனை துணை ஊழியர்கள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்ல். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு பிறகே, இந்த கேள்விகள் அதிகமாக எழ தொடங்கின. இதனால்தான் பணி நீக்கம் என்று முழுமையாக கூறப்படாவிட்டாலும், துணை ஊழியர்களை ஒழுங்கமைப்பதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதனால், நீக்கப்படவுள்ள அபிஷேக் நாயர், டி திலீப் அல்லது தேசாய் ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்கள் அல்ல என்று கூற முடியாது. இத்தனை பயிற்சியாளர்கள் எதற்கு என்ற கேள்வியே நீக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
முக்கிய ஊழியர்களுக்கு மட்டும் இடம்:
🚨 BIG BREAKING 🚨
BCCI takes action on BGT’s poor performance and ‘leaks’
– Assistant coach Abhishek Nair removed
– Trainer Soham and fielding coach T. Dilip relieved due to more than three years
– Adrian Li Ru will replace Soham#BCCI #Abhisheknair #cricket #TDilip #TeamIndia pic.twitter.com/8fgC2wvWXq— Sachin sharma (Sports and political journalist) (@72Sachin_sharma) April 17, 2025
கிடைத்த தகவலின்படி, சோஹம் தேசாய்க்குப் பதிலாக அட்ரியன் லு ரூக்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் 2025ல் பஞ்சாப் அணியின் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக லு ரூக்ஸ் உள்ளது. மேலும், இவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2019 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தார். முன்னதாக, லு ரூக்ஸ் 2002 முதல் 2003 வரை இந்திய அணியிலும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் பதவியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் பணி:
அபிஷேக் நாயரின் பணியை பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக்கும், திலீப் பணியை ரியான் டென் டோஷேட் ஆகியோரும் மேற்கொள்வார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே கவுதம் கம்பீர் பயிற்சி குழுவில் உள்ளனர். டென் டோஷேட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தார்.