Anshul Kamboj IPL 2025 Debut: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்! சென்னை அணியில் அறிமுகமாகும் அன்ஷுல் காம்போஜ்..! யார் இவர்..?

Who is Anshul Kamboj: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள அன்ஷுல் காம்போஜ், 2024 ரஞ்சி டிராபியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனை படைத்தவர். ரூ. 3.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். இன்றைய சென்னை-கொல்கத்தா போட்டியில் அவர் அறிமுகமாகிறார். அவரது வேகப்பந்து வீச்சு மற்றும் யார்க்கர்கள் சென்னைக்கு வலிமையை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Anshul Kamboj IPL 2025 Debut: ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்! சென்னை அணியில் அறிமுகமாகும் அன்ஷுல் காம்போஜ்..! யார் இவர்..?

அன்ஷுல் காம்போஜ்

Published: 

11 Apr 2025 20:26 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 25வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 11ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரஹானே டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். டாஸ் போட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “ ருதுராஜ் கெய்க்வாட் முழு ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகினார். நான் அணிக்கு கேப்டனாக இருப்பேன். இன்றைய போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராகுல் திரிபாதி மற்றும் அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் விளையாடும் 11 பேரில் சேர்க்கப்பட்டுள்ளனர். முகேஷ் சவுத்ரி மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இன்று விளையாடும் 11 பேரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்றார். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அன்ஷுல் காம்போஜ் யார் என்று பார்ப்போம்.

யார் இந்த அன்ஷுல் காம்போஜ்..?

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அன்ஷுல் காம்போஜ் ரூ. 20 லட்சத்தின் சாதாரண அடிப்படை விலையில் இருந்தார். ஏலத்தில் இவர் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடுமையான ஏலப்போர் நடைபெற்றது. கடைசியாக அன்ஷுல் காம்பஜை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.3.8 கோடி வாங்கியது. இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனில் சென்னை அணிக்காக கடந்த 5 போட்டிகளில் விளையாடாத கம்போஜ், இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

ரஞ்சி போட்டியில் அசத்தல்:

ஹரியானாவில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ், 2024 ரஞ்சி டிராபியின்போது சிறப்பான சாதனை படைத்தார். அதாவது, ரஞ்சி வரலாற்றில் ஒரே இன்னின்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம், ரஞ்சி டிராபி வரலாற்றில் இந்த சாதனையை செய்த மூன்றாவது வீரரானார் அன்ஷுல் காம்போஜ்.

மும்பை அணிக்காக ஐபிஎல்லில் அறிமுகம்:

ஐபிஎல் 2024ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அன்ஷுல் காம்போஜ் தனது ஐபிஎல் அறிமுக வாய்ப்பை பெற்று சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிக்கு எதிராக களமிறங்கினார். அந்த போட்டியில் அவரால் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. தொடர்ந்து, அந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அவரது திறமையைக் கண்டு, மும்பை அணி அவரை ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால், ஐபிஎல் 2025 நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரைத் தக்க வைத்துக் கொள்ளவில்லை.

அன்ஷுல் காம்போஜ் ஐபிஎல்லில் இதுவரை விக்கெட்டுகள் குறைவாக இருந்தாலும், பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வது யார்க்கர்களை வீசுவது உள்ளிட்டவைகளை கையாண்டு எதிரணி சிறப்பான தாக்கத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அன்ஷுல் காம்போஜ் 22 டி20 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories
BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?
IPL 2025: முதலிடத்தை தக்க வைக்க விரும்பும் GT.. டஃப் கொடுக்க முயற்சிக்குமா KKR..? ஹெட் டூ ஹெட் விவரம் இதோ!
Youngest CSK Debutants: சிஎஸ்கே அணிக்காக இளம் வயதில் அறிமுகம்..! தோனி தலைமையில் களமிறங்கிய வீரர்கள் பட்டியல்!
MI vs CSK: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய மும்பை.. CSK நம்பிக்கையை உடைத்த ரோஹித் – சூர்யா ஜோடி…!
PBKS vs RCB: மீண்டும் ஒரு அரைசதம்! கலக்கிய கோலி – படிக்கல் ஜோடி.. பெங்களூரு கெத்தான வெற்றி!
IPL 2025 Playoff Race: செய் அல்லது செத்துமடி! மும்பைக்கு எதிராக கட்டாய வெற்றி தேவை! பிளே ஆஃப் வெளியேற்ற அபாயத்தில் சிஎஸ்கே!