IPL 2025: வான வேடிக்கை காண்பித்த அபிஷேக் சர்மா – தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட ஹைதராபாத்

SRH vs PBKS: அபிஷேக் சர்மாவின் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 245 ரன்கள் எடுத்திருந்தாலும் அந்த அணியின் மோசமான பீல்டிங்கால் தோல்வியைத் தழுவியது.

IPL 2025: வான வேடிக்கை காண்பித்த அபிஷேக் சர்மா - தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட ஹைதராபாத்

அபிஷேக் சர்மா

Published: 

13 Apr 2025 00:37 AM

ஐபிஎல் (IPL) போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் ஏப்ரல் 12, 2025 அன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (Sun Risers Hyderabad) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 245 ரன்களை குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 6 சிக்சர், 6 பவுண்டரி என 82 ரன்களைக் குவித்தார். கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோயின்ஸ், ஷமி போட்ட கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார். இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். 2 ஓவரில் அபிஷேக் சர்மா 4 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கோ ஜான்சன் வீடிய பந்து வீச்சில் தூக்கி அடித்த பந்தை, ஸ்டோயினிஸ் கேட்ச் பிடிக்க தவற, அபிஷேக் காப்பாற்ற பட்டார். அபிஷேக்கின் பேட்டில் இருந்து தொடர்ந்து 6, 4 ஆக பறந்தன. தொடர்ந்து ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை அவர் நாலாபுறமும் சிதறடித்தார்.

டிாவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தங்களது அரைசதத்தை பதிவு செய்தனர். சிறப்பான பங்களிப்பை வழங்கிய டிராவிஸ் ஹெட், 31 பந்துகளில் 3 சிக்ஸ் 9 பவுண்டரிகள் என 66 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் வீசிய 13 வது ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே 13 வது ஓவரில் 40 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார். அப்போது தனது பையில் இருந்த ஒரு பேப்பரை தூக்கி காட்டினார். அதில் இது ஆரேஞ்ச் ஆர்மிக்காக என எழுதப்பட்டிருந்தது.

அபிஷேக்கின் அதிரடி ஆட்டம்

அப்போதும் அபிஷேக் நிறுத்துவதாக இல்லை. அபிஷேக் பேட்டில் இருந்து 6, 4 ஆக பறந்தன. கடைசியாக அர்ஷ்தீப் சிங் வீசிய 17 வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அவர் 55 பந்துகளில் 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகள் என 141 ரன்கள் குவித்திருந்தார்.  இதனையடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற 16 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கிளாசன் மற்றும் இஷான் கிஷன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து 18.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

தொடர் தோல்விகளில் இருந்து மீண்ட ஹைதராபாத்

இதனையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. புள்ளி பட்டியலில் கடைசி கட்டத்தில் இருந்த ஹைதராபாத் அணி இவ்வளவு பெரிய ரன்களை அவர்கள் சேஸ் செய்வார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு அந்த அணியின் ஓனர் காவ்யா மாறன் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. இதனையடுத்து கடைசி இடத்தில் இருந்த அந்த அணி இந்த வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

Related Stories